இதெல்லாம் இருந்தாதான் அது வால்ட் டிஸ்னி படம்!

ரி படம் என்றால் அருவா, மணிரத்னம் படம் எனில் அரை இருட்டு, சுந்தர்.சி படம் என்றால் துண்டு கட்டி குளிக்கும் ஹீரோயின்கள், மிஷ்கின் படம் எனில் விதவிதமான கால்கள்... இப்படி யூனிஃபார்ம் மேனியாக்கள் நம்முரில் மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கெல்லாம் முன்னோடி நம் டிஸ்னியேதான். சில சீன்கள், சில லாஜிக்குகள் என அப்படியே படம் தவறாமல் தொடரும் இதோ சில 'அப்படியேவா' மொமெண்டுகள்!

டிஸ்னி படங்களில் தீயசக்திகள் என்றாலே, அந்த நபரைச் சுற்றியோ அல்லது தீய சக்திகள் இருக்கும் இடத்திலோ கிளிப்பச்சை வண்ணம் அடிப்பார்கள். உதாரணத்திற்கு ’என்சாண்டட்’ சூன்யக்காரி, பச்சை விளக்குடன் ‘டேங்ள்ட்’ படத்தின் மாந்திரக்காரி, லயன் கிங் வில்லன் சிங்கம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சோகத்தில் தேம்பி அழும் ஹீரோயின்கள். எப்போதும் படுக்கையில் விழுந்தோ அல்லது அருகில் இருக்கும் ஏதேனும் பொருள் மீது நாடகத்தனமாக குப்புற கவிழ்ந்தோ மட்டுமே டிஸ்னி பெண் கேரக்டர்கள் அழுவார்கள். ’அலாதின்’ கார்ட்டூனின் ஜாஸ்மின் மற்றும் இளவரசி ஏரியல் என்று உதாரணம் சொல்லிக்கோண்டே போகலாம்.

டிஸ்னியின் முக்கிய கேரக்டர்கள் க்ளவ்ஸ்களை விடாது அணிந்திருப்பார்கள். உதாரணம்: டிஸ்னியின் மிக்கி மவுஸ், ’ஃப்ரோஸன்’ படத்தின் எல்ஸா. தனது சக்தியையே கை உறைக்குள்தான் மறைத்து வைப்பார் எல்ஸா. அடுத்து அதே படத்தின் வில்லன், வால்ட் டிஸ்னியின் ஹாட் கேரக்டரான ஜெஸிக்கா ரேபிட், இப்படி டிஸ்னி படங்கள் என்றாலே ஏதாவது ஒரு கேரக்டர் கண்டிப்பாக க்ளவ்ஸ் அணிந்து வரும்.

காட்டுவாசி உடையை தவறாது யாராவது அணிந்து வருவார்கள். உதாரணம்: டிஸ்னியின் டிமோன், , ஃப்ரோஸன் ஒலாஃப். சிரட்டை மூடி, இலைதழை பாவாடை இதை கட்டிக்கொண்டு வரும் காமெடி கேரக்டர்களை அதிகம் காணலாம்.

இப்படி படத்திற்கு படம் ஏதேனும் ஒரு யூனிஃபார்ம் மேனியா டிஸ்னியின் அனிமேஷன் அல்லது ஃபேன்டசி படங்களில் இடம்பெறுவதை அடுத்த முறை கவனிக்கத் தவறாதீர்கள்.

- ஷாலினி நியூட்டன் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!