பேட் மேன் Vs சூப்பர் மேன் பட டிரெய்லர் லீக்! வீடியோவை வைரலாக்கிய ரசிகர்கள்

சூப்பர் ஹீரோக்களான பேட் மேன் மற்றும் சூப்பர் மேன் ஓரே படத்தில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் பேட் மேன் Vs சூப்பர் மேன் (Dawn of Justice). இதன் 20 நொடிக்கான டீஸர் ரிலீஸாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இதன் டிரெய்லர் லீக் ஆனதால் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாம் படக்குழு!

பேட் மேன் Vs சூப்பர் மேன் டீஸர் வீடியோ:

சூப்பர் மேன் படத்தின் கடைசி பாகமான மேன் ஆஃப் ஸ்டீஸ் படத்தின் இயக்குநர் ஸேக் ஸ்னிடெர் இப்படத்தினையும் இயக்குகிறார். பேட் மேனாக பென் அபிலிக்கும் சூப்பர் மேனாக மேன் ஆஃப் ஸ்டீல் படத்தின் ஹீரோவாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் ஹென்ரி கவில் இந்தப் படத்திலும் சூப்பர் மேனாக நடித்துள்ளார். மேலும் எமி ஆடம்ஸ், லாரன்ஸ் பிஷ்பர்ன்,  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள் ஒன்றிணைந்து ஒரே படத்தில் நடித்தால் எப்படியிருக்கும் என்பதே சமீபத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. அவெஞ்ஜர்ஸ் படத்தின் பாணியிலேயே சூப்பர் ஹீரோக்கள் ஒரே படத்தில் நடிக்கும் அடுத்தப் படமாக பேட் மேன் Vs சூப்பர் மேன் படமும் இருக்கும். படம் அடுத்த வருடம் மார்ச் 26ல் வெளியாக இருக்கிறது.

பேட் மேன் Vs சூப்பர் மேன் படத்தின் டிரெய்லர் வருகிற 20ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவில் படத்தில் டிரெய்லர்  இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆகியிருப்பதால் வீடியோ வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பேட் மேன் Vs சூப்பர் மேன் படத்தின் டிரெய்லர் இதுவாக கூட இருக்கலாம்..

லீக் ஆன பேட் மேன் Vs சூப்பர் மேன் டிரெய்லர்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!