இவ்வளவுதான் அமெரிக்க ஹாலிவுட் படங்கள்…வாட்ஸப் கலாட்டா

அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஹாலிவுட் படங்களில் தவறாமல் இவையாவும் இடம்பெறும்.என வாட்ஸப்பில் அமெரிக்க படங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் விஷயங்களை கிண்டலடித்து ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் சுற்றி வருகிறது.    

எப்பவுமே FBI/CBI வேலை பாக்குற எல்லாருமே அண்டர்கவர் போலீஸாக இருப்பார்கள். மக்கள் தொகையில பெரும்பாலான ஆட்கள் போலீஸாக வேலை செய்வார்கள். எப்பேற்பட்ட ஆபத்தாயினும் போலீஸ் குடும்பம் மட்டும் அழகாக சிரித்தப்படி கடைசியில் நிற்பார்கள்.

அமெரிக்க படங்களில் காட்டும் பள்ளிகள் யாவும் கால்பந்து, அல்லது பேஸ் பால் இரு விளையாட்டுகளை மட்டுமே பிரபல படுத்துவார்கள். சிறப்பு ஸ்பான்சர்ஷிப் வாங்கிடுவார்கள் போல.

வேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க நினைத்தாலே அவர்கள் இறங்கும் இடம் அமெரிக்கா மட்டும் தான். ஏலியன்ஸ் அட்டாக் அமெரிக்கர்கள் மீது மட்டுமே. அமெரிக்காவில் மட்டுமே ஓநாய்கள், வித்யாசமான ஜந்துக்கள், மற்றும் ரத்தக் கட்டேரிகள் வரும்.மற்ற நாடுகளுக்கு அந்த கொடுப்பனை கிடையாது.

இயற்கை சீற்றம் என்றாலே முதலில் தாக்கப்படுவது வெள்ளை மாளிகையும் அதிபரும் தான். அமெரிக்க அதிபர் மட்டுமே நடு ரோட்டில் கூட இறங்கி மக்களுக்காக குரல் கொடுப்பார். தேவைப்பட்டால் துப்பாக்கி சகிதமாக அதிபரே ஆபரேஷனிலும் இறங்குவார்.

கண்டிப்பாக அமெரிக்க படமெனில் ஒரு ஆப்பிரிக்கா நாட்டு கருப்பு நடிகர் பரிதாபமாக உயிர் விடுவார். அதிலும் ஹீரோக்களுக்காக மட்டுமே அவர்களின் உயிர் போகும். ஹ்ம்... இவ்வளவுதான் அமெரிக்க படங்கள் என வாட்ஸப்பில் ஹாலிவுட் படங்களையும் ஒரு காட்டு காட்டி மெஸேஜ்களை ஷேர் செய்துள்ளனர் நம்மூர் இளசுகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!