வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (21/04/2015)

கடைசி தொடர்பு:20:27 (21/04/2015)

பால் வாக்கரின் கார் ஏலம்!

‘‘இந்த ஃபெராரி என்ன ரேட்?’’
- டொயோட்டா சுப்ரா ஆரஞ்ச் கலர் காரில் உட்கார்ந்தபடி பால் வாக்கர், தனக்கு எதிரே உள்ள ஃபெராரி டிரைவரிடம் கேட்பார். "It's More than you can afford Paul.. Sorry" (உன்னால் இதை வாங்க முடியாது பால்) என்பார் நக்கல் பிடித்த ஃபெராரி டிரைவர்.

‘‘எது காஸ்ட்லினு ஒரு ரேஸ் வெச்சுப் பார்த்துடலாம்!’’ என்று ‘வ்வ்ர்ரூம்... வ்ர்ர்ரூம்’ என ஆக்ஸிலரேட்டரை ரெவ் செய்தபடி, ரேஸுக்குத் தயாராவார் பால் வாக்கர்.

- 2001-ல் வெளிவந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். சினிமாவுக்காகவோ என்னவோ, வழக்கம்போல் ஹீரோவான பால்வாக்கர்தான் அதில் ஜெயிப்பார். ஆனால், நிச்சயம் ஒரு ஃபெராரியை முந்தும் அளவுக்கு வெறும் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்ட அந்த டொயோட்டா சுப்ராவில் பவர் கிடையாது. ஆனால், நம்புங்கள் ஆர்வலர்களே... இப்போது உலகின் பவர்ஃபுல்லான காராக மாறியிருக்கிறது அந்த டொயோட்டா சுப்ரா. காரணம் - பால்வாக்கர்!

2013-ம் வருடம் நவம்பர் மாதம் ஒரு கொடூரமான கார் விபத்தில் பலியான பால்வாக்கர், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தில் பயன்படுத்திய அந்த சுப்ரா, இப்போது செம காஸ்ட்லி விலையில் ஏலத்துக்குத் தயாராகி நிற்கிறது. அமெரிக்காவின் இண்டியானா போலிஸ் ஸ்டேட் ஃபோர்கிரவுண்ட்ஸில் மே 12 முதல் 17-ம் தேதி வரை நடக்கும் ‘மெக்கம் ஆக்ஷன்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறது சுப்ரா.

3.0 லிட்டர் இன்ஜின், 220bhp பவர், 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஹெவி ட்யூட்டி சஸ்பென்ஷன் கொண்ட இந்த காரை உருவாக்கியவர், எடி பால் என்னும் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர். ‘‘1970 மாடல் தயாரிப்பான டாட்ஜ் காருடன் வின்டீசலுடன் முதலில் போட்டி போட சுப்ரா காரைத் தயாரிக்கச் சொன்னார்கள். பூமெக்ஸ் பாடி கிட், ஏபிஆர் விங் என்னும் ஸ்பாய்லர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை ரெடி பண்ணி சுப்ராவைத் தயார் செய்தேன். கொஞ்ச நாள் கழித்து, ஃபெராரியுடன் போட்டி போடும் அளவுக்கு இதே சுப்ராவை வேறு மாதிரி ரெடி பண்ணச் சொன்னார்கள். ஃபெராரியை பீட் செய்யும் அளவுக்கு நிச்சயம் சுப்ராவை மாற்ற முடியாது. அட்லீஸ்ட் ஓரளவாவது ரெடி பண்ண வேண்டுமே... அதனால் பின் பக்கம் நைட்ரஸ் ஆக்ஸைட் பாட்டில்கள், ஹெவி டியூட்டி சஸ்பென்ஷன், டர்போ சார்ஜர் போன்ற பல விஷயங்களைச் சேர்த்தேன். இப்போது நான் தயாரித்த கார், ஏலத்துக்குத் தயாராகப் போகிறது என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது!’’ என்று பெருமைப்படுகிறார் எடி பால்.

 படத்தில் ஃபெராரியையே ஜெயித்த சுப்ராவை ஏலத்தில் எப்படியாவது லவட்டி விட, அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர்கள் டாலர்களை இப்போதே எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

என்னது... ஆரம்ப விலை எவ்வளவுன்னா கேட்கறீங்க! 

'It's More than you can afford.... Sorry'

- தமிழ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்