வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (29/04/2015)

கடைசி தொடர்பு:11:41 (29/04/2015)

அவெஞ்சர்ஸ் படத்தின் ரசிகர்களா நீங்கள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஏப்ரல் 24ம் தேதி ராபர்ட் டௌனி, கிரிஸ் இவான்ஸ், க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், ஸ்கேர்லெட் ஜோஹன்சன், மார்க் ருப்பல்லோ உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜோஸ் வேடன் இயக்கிய படம் ‘அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’. கெவின் ஃபெய்ஜ் இயக்கிய இப்படம் தான் ராபர்ட் டௌனியின் உலகப் புகழ் கெட்டப்பான ‘அயன் மேன்’ படத்தின் கெட்டப்பும் நிறைவு பெறுகிறது. 

படம் வெளியாகி 5 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னனும் படத்தின் கிரேஸ் குறைந்த பாடில்லை. இப்போது அவெஞ்சர்ஸ் படத்தின் ரசிகர்களுக்கு சிறப்பு செய்தியாக இவ்வருடத்தின் இறுதியில் அதிகாரப்பூர்வ ப்ளூ ரே டிவிடிக்களை படக்குழுவே வெளியிட உள்லனர். 

முக்கியச் செய்தியாக டிவிடியில் நீக்கப்பட்ட காட்சிகள், மற்றும் அதிகமான சீன்களுடன் வெளியாக உள்ளது. மேலும் ஒரு ஆச்சர்யம் டிவிடியில் அடங்கியுள்ளது என படக்குழு சர்ப்ரைஸும் வைத்துள்ளனர். இந்த டிவிடிக்களுக்கான முன் பதிவுகளும் துவங்கிவிட்டது. 

அதிகாரப்பூர்வ மார்வெல் இணையதளத்திற்கு மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிடி எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்