உருவாகிறது இந்தியானா ஜோன்ஸ் படத்தின் 5ம் பாகம் | 5th Series of Indiana Jones Has confirmed?

வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (07/05/2015)

கடைசி தொடர்பு:14:26 (07/05/2015)

உருவாகிறது இந்தியானா ஜோன்ஸ் படத்தின் 5ம் பாகம்

1981ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்திற்கு ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

ரைடர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் என்ற படத்தில் முதல்முறையாக தோன்றிய இந்த பாத்திரம் , 1984ம் ஆண்டு வெளியான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த டெம்பிள் டூம்’ படம் மூலம் முதன்மை பாத்திரமாக மாற்றப்பட்டு தொடர்ச்சியாக 1989ம் ஆண்டு இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த லாஸ்ட் க்ரூசேட், மற்றும் 2008ம் ஆண்டு இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆஃப் கிரிஸ்டல் ஸ்கல்’ என 4 பாகங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றது.

அனைத்து பாகங்களிலும் ஹாரிஸன் ஃபோர்ட் இந்தியானா ஜோன்ஸ் பாத்திரத்தில் நடித்தார். தற்போது புதிய செய்தியாக இப்படங்களில் 5ம் பாகம் வெளியாக உள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் கத்லீன் கென்னடி அறிவித்துள்ளார். படம் எப்போது துவங்கும் எப்போது முடியும் என்ற அறிவிப்பு இப்போதைக்கு இல்லை. எனினும் படம் விரைவில் துவங்கப்பட உள்ளது என காத்லீன் அறிவித்துள்ளார்.

இதில் சோகமான செய்தி என்னவென்றால் இதுவரையில் ஹாரிஸன் ஃபோர்ட் நடித்த இப்பாத்திரத்திற்கு தற்போது கிறிஸ் ப்ராட் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்