இந்த படத்தையும் விட்டுவைக்கவில்லை மார்லன்

இந்த வருடத்தின் எதிர்ப்பார்ப்பின் உச்சம் தொட்ட படமாக வெளியான ஹாலிவுட் படம் ‘50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே’. சாம் டெய்லர் ஜான்சன் இயக்கத்தில் டகோடா ஜான்சன், ஜேமி டோர்னன் நடிப்பில் , இ.எல்.ஜேம்ஸ் எழுதிய நாவலின் திரைப்பட வடிவாக்கம் தான் அதே பெயரில் வெளியானது. டிரெய்லரே கோடிகளை தொட்டு டாப் கியரில் போக , அடுத்து படம் எப்போது ரிலீஸ் என காத்திருந்த கண்களுக்கு போஸ்டர் கூட கிடையாது என்ற பாணியில் பல நாடுகளில் படத்தை தடை செய்தனர்.

அடல்ட்ஸ் ஒன்லி படங்களை அசால்ட்டாக பார்க்கும் அமெரிக்காவிலேயே பல கட்டுப்பாடுகளோடு தான் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்த படத்தின் காமெடி வெர்ஷனை உருவாக்க களம் இறங்கிவிட்டார் பரோடி ஸ்டைல் (காமெடி) பட நாயகன் மார்லன் வேயான் ’ஸ்கேரி மூவிஸ்’, ’ஒயிட் சிக்ஸ்’ என பல ஒரிஜினல் படங்களை கலாட்டா செய்து இவர் எடுத்த படங்கள் ஏராளம். தற்போது இவரிடம் சிக்கியுள்ள அடுத்த படம் ‘50 ஷேட்ஸ் ஆஃப் கிரே’.

இதை ‘50 ஷேட்ஸ் ஆஃப் ப்ளாக்’ என்ற பெயரில் எடுக்க இருக்கிறார். இதுகுறித்து சின்ன வீடியோவும் இன்ஸ்டக்ராமில் மார்லன் வெளியிட்டுள்ளார். அடக்கடவுளே இந்த படத்தை என்னென்ன பண்ணப் போறாரோ என சிந்திப்பதற்குள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் கீழே பேண்ட் இல்லாமல் காமெடி லுக் கொடுக்கும் மார்லனின் போஸ் அனைவரையும் அப்படியே ஷாக்காயிட்டேன் ரேஞ்சுக்கு மாற்றியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!