சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட நாய்கள்... ஜானி டெப்புக்கு செக் வைத்த ஆஸ்திரேலிய அரசு | Australia Threatens to Put Down Johnny Depp's Dogs

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (14/05/2015)

கடைசி தொடர்பு:16:46 (14/05/2015)

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட நாய்கள்... ஜானி டெப்புக்கு செக் வைத்த ஆஸ்திரேலிய அரசு

ஜானி டெப் ஆஸ்திரேலியாவிற்கு வருகையில் சட்ட விரோதமாக தனது இரு நாய்களை கொண்டுவந்துள்ளார். இரு நாய்களையும் வரும் சனிக்கிழமைக்குள் நாட்டைவிட்டு அனுப்பவேண்டும் என்று ஆஸ்திரேலிய வேளாண் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அப்படி செய்யவில்லை எனில் அவைகள்  கொல்லப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜானி டெப், தமது சொந்த விமானத்தில் இரு யார்க்‌ஷைர் டெர்ரியர்ஸ் வகை நாய்களை ஆஸ்திரேலியாவின்  அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டு வந்ததாக அந்நாட்டின் அமைச்சர் பார்னார்பி ஜாய்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் 5ம் பாகத்தின் படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவிற்கு ஜானி டெப் சென்றுள்ளார்.அப்போது தனது செல்ல நாய்களை அவர் அனுமதி பெறாமல் தமது சொந்த விமானத்தில் கொண்டுவந்துள்ளார். 

இதுகுறித்து ஜானி டெப்பிடம் இருந்து எந்த கருத்தும் வரவில்லை. நாய்களுக்கான சலூனிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவை சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.  இன்னும் 4 நாட்களுக்குள் நாய்களை அமெரிக்காவிற்குத் திரும்ப அனுப்பவேண்டும் அல்லது நாய்கள் கொல்லப்படும் என ஆஸ்திரேலிய வேளாண்மை அமைச்சகம்  தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் தற்போது சிக்கலில் உள்ளார் ஜானி டெப். மேலும் ராபிஸ் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டில் விலங்குகள் கொண்டுவருவதில் தகுந்த சான்றிதழ், அனுபதி கடிதம் பெறாமல் நாட்டிற்குள் கொண்டு வர இயலாது என்பதால் தற்போது ஜானி டெப் மீண்டும் அமெரிக்கா கிளம்பும் திட்டத்தில் இருக்கிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close