இளையராஜாவின் முதல் ஆங்கில படம்.....லவ் அண்ட் லவ் ஒன்லி | Ilaiyaraaja's First English Movie....Love And Love Only

வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (02/06/2015)

கடைசி தொடர்பு:19:17 (02/06/2015)

இளையராஜாவின் முதல் ஆங்கில படம்.....லவ் அண்ட் லவ் ஒன்லி

 இளையராஜாவின் முதல் ஆங்கிலப் படமான ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. ஜூலியன் கரிகாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரு ஆஸ்திரேலியப் படம். படத்தின் இயக்குநரான ஜூலியன் கரிகாலன் மதுரையை அடிப்படையாகக் கொண்ட ஆஸ்திரேலிய வாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்திற்கு மூன்று பாடல்களை இளையராஜா அமைத்துள்ளார். பின்னணி இசை கோர்ப்பு ப்ரெண்ட் ஹிபெர், மற்றும் கதை திரைக்கதை, தயாரிப்பு ஜூலியன் கரிகாலன். பஞ்சாபி இளைஞன் ஒருவன் ஆஸ்திரேலியாவிற்கு படிக்க செல்கிறான். 

படித்துக்கொண்டே ஒரு டிபார்ட்மெண்டல் கடையில் வேலை செய்கையில் அங்கே வேலை செய்யும் ஆஸ்திரேலியப் பெண்ணுடன் காதல் உண்டாகிறது. இந்திய, ஆஸ்திரேலிய உள்ளங்கள் இணைகையில் இருவருக்குமான கலாச்சாரம் பேசத் துவங்குகிறது. முடிவு என்ன என்பதே படத்தின் கதை. இப்படம் நேரடியாக உலக சினிமா விழாவில் விரைவில் திரையிடப்பட உள்ளது.

இந்த படத்தின் தலைப்பான லவ் அண்ட் லவ் ஒன்லி இளையராஜா இசையில் ஹிட்டடித்த ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இடம்பெறும் ‘Love And Love Only'  புத்தகத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close