39 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகி 39 ஆயிரம் மட்டுமே வசூல்! தியேட்டரில் பார்க்க வந்த ஒரே ரசிகர்

ர்வதேச கால்பந்து சம்மேளனம் உருவான வரலாற்றை மையமாக வைத்து ஃபிஃபா தயாரிப்பில் வெளி வந்த 'யுனைடெட் ஃபேஷன்ஸ்' என்ற திரைப்படம்  அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பீனிஸ் டவுட்டன் நகரில் பிலிம்ஃபேர் திரையரங்கில் ஒரே ஒரு ரசிகர்தான் பார்க்க வந்துள்ளார். எனினும் அவருக்காக அந்த படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

 ஊழல் புகார் காரணமாக ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் அண்மையில் பதவி விலகினார். இவர் பதவியில் இருந்த காலத்தில்தான், யுனைடெட் ஃபேஷன்ஸ் என்ற ஹாலிவுட் படம் தயாரிக்க நிதியுதவி செய்யப்பட்டது. ஃபிஃபா தயாரித்த முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஃபிஃபாவில் எழுந்த ஊழல் புகார் காரணமாக திரைப்படம் 3 நாட்களில் பெட்டிக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரடெரிக் ஆபர்டின் எழுதி, இயக்கிய இந்த படம், கடந்த வெள்ளியன்று அமெரிக்காவில் நியூயார்க்,லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்கடன் உள்ளிட்ட நகரங்களில் 10 தியேட்டர்களில் வெளியானது.

இதில் பீனிஸ் டவுட்டன் நகரில்தான் ஃபிஃபா படத்துக்கு உச்சக்கட்ட கொடுமை நடந்துள்ளது. இங்குள்ள பிலிம்ஃபேர் தியேட்டரில் வெளியான இந்த படத்தை காலை காட்சி பார்க்க ஒரே ஒரு ரசிகர்தான் வந்துள்ளார். அவர் 9 டாலர் செலுத்தி டிக்கெட் எடுத்துள்ளார். அந்த ஒரே ஒரு ரசிகருக்காக யுனைடெட் ஃபேஷன்ஸ் படத்தை திரையிட்டு காட்டியுள்ளனர். படம் முடியும் வரை இருந்து அந்த ரசிகர் படத்தை பார்த்து விட்டுதான் போனாராம்.

கடந்த வெள்ளி, சனி இரு நாட்களில் வெறும் 67 டாலர்களைதான் (இந்திய மதிப்பில் சுமார் 39 ஆயிரம்) இந்த படம் வசூலித்துள்ளது. ஃபிஃபா உருவான வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் டிம் ராத், ஜோசப்பிளாட்டர் வேடத்தில் நடித்துள்ளார்.சாம் நீல், பிளாட்டருக்கு முன்பு தலைவராக இருந்த ஜோவோ ஹவலெங்கே வேடத்தை ஏற்றுள்ளார். ஃபிஃபாவை நிறுவியவரான ஜூல்ஸ் ரிமெட் வேடத்தில் ஜெரார்ட் டெபர்டியூ நடித்துள்ளார்.ஜுல்ஸ் ரிமேட்டுக்குதான் ரசிகர்களிடையே சற்று வரவேற்பு கிடைத்ததாம். 

சுமார் 32 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பிளேட்டரின் செல்வாக்கு சரிவு கண்ட நேரத்தில் வெளிவந்ததுதான் மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது என்று ஃபிஃபா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இனி ஃபிஃபா ஊழல்ல வச்சு எடுத்தா படம் பிச்சிக்கும்...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!