2 கோடி பேரால் பார்க்கப்படும் சீரியல் | 2Crore Fans For One serial!

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (11/06/2015)

கடைசி தொடர்பு:17:24 (11/06/2015)

2 கோடி பேரால் பார்க்கப்படும் சீரியல்

கிட்டத்தட்ட 2 கோடி பேரால் பார்க்கப்படும் சீரியல் ஒன்று இருக்கிறது தெரியுமா?

HBO சேனலில் ஒளிப்பரப்பாகும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்னும் சீரியல் தான் உலகிலே அதிகப்பேரால் பார்க்கப்பட்டது என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் இணையம் எங்கும் வொயிட் வாக்கர்ஸ், டிரியன் லேனிஸ்டர்,செர்ஸி,8வது எபிசோட் பாத்துட்டியா,செம்ம என வைரல் காய்ச்சல் அடிக்கும். .

பிறகு ஸ்லீப்பர் செல்களாய் பதுங்கிற கூட்டம் , அடுத்த ஆண்டின் ஏப்ரல் வரை அதை பற்றி தங்களுக்குள்ளே பேசி லயிக்கும். GEORGE R.R.MARTIN எழுதிய “A SONG OF ICE AND FIRE” நாவல் தொகுப்பை தழுவி வெளியாகும் தொலைக்காட்சி தொடர்தான் GAME OF THRONES. 2011 வரை மார்ட்டின் எழுதிய ஐந்து பாகங்களிலேயே பண மழையில் நனைந்தவருக்கு HBO தொலைக்காட்சி தொடரால் அடித்தது சர்ப்ரைஸ் ஜாக்பாட். புத்தகம்,தொலைகாட்சி தொடர்,கேம்ஸ், பொம்மைகள், என இது தொட்டதெல்லாம் மிடாஸ் டச். வருடத்திற்கு ஒரு சீசன்.சீசனுக்கு பத்து எபிசோட் என இந்த வாரத்தோடு ஐந்து சீசன்கள் நிறைவு பெறுகின்றன. கதையின் பெரும் பகுதி வெஸ்டராஸிலும்(7 நிலங்கள்), எஸ்சாசிலும் நடக்கிறது இந்த இரு கண்டங்களை பிரித்து வைப்பது நேரோ சீ (NARROW SEA). ஏழு நிலங்களை தன்னகத்தே கொண்ட வெஸ்டராசை ஆள்பவர் கிங்க்ஸ் லேண்டிங் என்னும் இடத்திலும்,இவர்களை அழித்து இழந்த ராஜ்யத்தை ட்ரேகன்களின் துணையோடு கைப்பற்ற துடிக்கும் டநேரியஸ் டார்கேரியனுக்கும் இடையே நடக்கும் கதை தான் கேம் ஆப் த்ரோன்ஸ்.

வெஸ்டராசில் இதுவரையில் கோடை காலம் மட்டும் தான்.இனி தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு பனி காலம் மட்டுமே, இந்த காலக்கட்டத்தில் வெஸ்டராசை மொத்தமாக அழிக்க படை எடுக்கிறார்கள் பனியில் புதைந்து இருக்கும் வொயிட் வாக்கர்ஸ்.கற்பனை உலகத்தில் ரியலிசமும் சரியான அளவு கலந்து கட்டி படமாக்கப்பட்டு இருப்பது இதன் ஸ்பெஷாலிட்டி என்கிறார்கள் ரசிகர்கள். எந்த ஒரு கதாப்பாத்திரமும் முற்றிலும் நல்லவன் இல்லை என்பதால், யாரும் எப்போதும் கொல்லப்படலாம் என்பது மாதிரியான திரைக்கதை தான் இதன் வெற்றிக்கு காரணம். சற்று அதீத வன்முறையும்,பாலுணர்வு காட்சிகளும் இருந்தாலும் விறுவிறுப்பு குறையாத ரிச் மேக்கிங் இதை ஐந்து சீசன் தாண்டியும் ஹிட் அடிக்க வைத்திருக்கிறது. பெரும்பாலும் நாவலை தழுவியே எடுக்கப்பட்ட போதும் மேலும் விறுவிறுப்பு கூட்ட சில காட்சிகளை மாற்றி எடுக்க ஆரம்பித்தனர்.

இன்னும் ஆறாவது நாவல் எழுதப்படாத நிலையில்,அடுத்த சீசன் ஆவல் இப்போதே பீடிக்க தொடங்கி விட்டது ரசிகர்களுக்கு. ஆறாவது நாவலும், தொடரும் சிறு இடைவெளியில் வெளிவருவதால், நாவலின் எதிர்ப்பார்ப்பு குறைந்து விடக்கூடாது என்பதால் மிகவும் சிரத்தையோடு எழுதுகிறார் 66 வயதான மார்ட்டின் சில சுவாரஸ்ய தகவல்கள்: -மிக பிரம்மாண்டமாய் எடுக்கப்படும் ஒவ்வொரு எபிசோடின் செலவு மட்டும் சுமார் 60 லட்சம் அமெரிக்க டாலர்கள் - வெளியான 12 மணி நேரத்தில் இதன் ஒரு எபிசோட் 20லட்சம் முறை இல்லீகலாக டவுன்லோட் செய்யப்பட்டு இருக்கிறது என்ற சோகமான சாதனையையும் படைத்து இருக்கிறது.

வரும் லாபத்தில் இது ஒரு பொருட்டே அல்ல என்கிறது HBO தயாரிப்பு தரப்பு. -சில காட்சிகளில் துண்டிக்கப்பட்ட தலை மாடல் தேவைப்பட்டதால் எளிதாக கிடைத்த முன்னால் அதிபர் புஷ்ஷின் தலை மாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள் -கூகிள் மேப்ஸ் ஐயர்லாந்தின் சில பகுதிகளுக்கு MODE OF TRANSPORT ட்ரேகன் என வெளியிட்டு இருக்கிறார்கள் -தொடரின் பெரும் பகுதி எடுக்கப்பட்ட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் ஜூவில் பார்வையாளர்களுக்காக தொடரில் வரும் ஒரு ட்ரேகனை வைத்து இருக்கிறார்கள் -சில எபிசோட் மட்டுமே வரும் டொத்ராக்கி என்னும் மொழிக்காக பிரத்யேகமாக 3000 வார்த்தைகளை புதிதாய் உருவாக்கி இருக்கிறார்கள்

-இதுவரையில் GOLDEN GLOBE ,10 SATURN ,42 EMMY போன்ற விருதுகளை பெற்றிருக்கிறது -இன்னும் இரண்டு நாவல் எழுத வேண்டிய நிலையில் , வயதாகி விட்டதால் (66)இறந்து விடுவோம் என்கிற நோக்கத்தில், கதையின் முடிவை தொடர் தயாரிப்பாளர்களிடம் மட்டும் கூறியுள்ளார் மார்ட்டின் - இந்த ஆண்டு ஜனவரி மாதல் ஐமேக்ஸ் அரங்கில் போன சீசனின் கடைசி இரண்டு எபிசோடுகளை மட்டும் வெளியிட்டார்கள். ஐமேக்ஸில் வெளியான முதல் டிவி சீரியல் என்ற சாதனையையும் இதன் மூலம் நிகழ்த்திவிட்டார்கள். ஹவுஸ்ஃபுல் என சொல்லவும் வேண்டுமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்