ஜேம்ஸ் ஹார்னர் திடீர் மரணம்- சர்வதேச திரையுலகம் அதிர்ச்சி. | TiTanic Music Composer james hornor Dead!

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (23/06/2015)

கடைசி தொடர்பு:12:34 (23/06/2015)

ஜேம்ஸ் ஹார்னர் திடீர் மரணம்- சர்வதேச திரையுலகம் அதிர்ச்சி.

டைட்டானிக், அவதார் உள்ளிட்ட ஜேம்ஸ் கேமரூன் படங்களுக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் உயிரிழந்தார். ஒட்டுமொத்த சினிமா உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

சாண்டா பார்பரா என்ற இடத்தில் ஜேம்ஸ் தானே விமானத்தை ஓட்டிச் சென்றிருக்கிறார். திடீரென ஏற்பட்ட இயந்திய கோளாரால் விமானம் தடுமாறி லாஸ் பாட்ரஸ் காட்டுக்குள் நேற்று காலை 9.30 மணிக்கு விழுந்திருக்கிறது. அவர் தான் என்று உறுதியாகத் தெரியாமல் இருந்தது. பின்னர் அவரின் உதவியாளரான பாட்ரிஜா ஜேம்ஸ் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர் தன்னுடைய சமுக வலைதளத்தில், “ உயர்ந்த இதயம் படைத்த சிறந்த திறமைசாலியை நாம் இழந்துவிட்டோம் என்று கூறியுள்ளார். அவர் இறந்தாலும் அவரின் அன்பு என்றும் இருக்கும். நீங்க இந்த உலகில் எங்களுக்கு செய்த அனைத்து உதவுகளுக்கும் என்னுடைய நன்றி ஜேம்ஸ்” என்று கூறியுள்ளார்.

நம்மால் யோசிக்க முடியாதவிஷயங்களை இசையில் நமக்கு விருந்து படைக்கும் வித்தகர் ஜேம்ஸ். டைட்டானிக் படத்திற்காக இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவர். உலகமே இன்றும் மயங்கிக் கிடக்கும் டைட்டானிக் பாடலான “ மை ஹார்ட் வில் கோ ஆன்” பாடலை இசையமைத்தவரும் இவரே. மேலும் டைகார்ட் , தி கராத்தே கிட், அ பியூட்டிஃபுல் மைண்ட், அமேசிங் ஸ்பைடர் மேன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

61 வயது இளைஞனாக என்றும் விமானத்தில் பறப்பதற்கே ஆசைப்படுபவர். அதுமட்டுமில்லாமல் மிகச்சிறந்த விமானி ஜேம்ஸ். அவரின் ஒரே விருப்பம் வானத்தில் பறப்பதே. இவரின் இறப்பு நிச்சயம் அனைவரையும் துயரத்தில் வீழ்த்தும். மறைந்தாலும் அவரின் இசையால் என்றுமே மனதில் நிறைந்திருப்பார் ஜேம்ஸ் ஹார்னர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்