அசாத்தியமான, அதிர்ச்சிகரமான காட்சிகள் நிறைந்த சுற்றுச்சூழல் படம்! | Impossible, traumatic scenes environmental film!

வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (30/06/2015)

கடைசி தொடர்பு:20:15 (30/06/2015)

அசாத்தியமான, அதிர்ச்சிகரமான காட்சிகள் நிறைந்த சுற்றுச்சூழல் படம்!

'அவென்ஞ்சர்ஸ்' என்ற ஹாலிவுட் படத்தை அனைவரும் பார்த்திருப்போம். சாகசங்களுக்காக இந்த படம் கொண்டாடப்பட்டது. ஆனால், உண்மை சம்பவங்களை மையமாக வைத்து, அதற்கு ஈடான சாகசங்கள் நிறைந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் லூயி பிஸியோஸ். இவர் எடுத்திருக்கும் படம் ட்ரைலரே நம்மை பிரமிக்க வைக்கிறது.

2009ல் 'தி கோவ்' (The Cove) என்ற ஆவணப்படத்தை எடுத்தவர். ஜப்பானில் உள்ள, டோக்கியோ நகரத்தில் திமிங்கலம் மற்றும் டால்பின்களை கறி விற்பனைக்காக வேட்டையாடும் சம்பவத்தை புலன் விசாரணை செய்யும் விதமாக படத்தை எடுத்திருந்தார். இந்த முயற்சிகளுக்காக ஆஸ்காருக்கு சென்றது இந்த ஆவணப்படம்.

கயிறுகளில் தொங்கியும், நீருக்குள் மூழ்கியும் மிகுந்த சவால்களுக்கு இடையில் 'தி கோவ்' படத்தை எடுத்தார். இப்போது 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, டால்பின் கறி விற்பனை பற்றி மீண்டும் படம் எடுத்துள்ளார்.

டால்பின், திமிங்கலத்தை வேட்டையாடுவது சர்வதேச கடல் சட்டத்தின்படி குற்றமாகும். ஆனால், இதையெல்லாம் கடந்து வேட்டையாடுவது தொடர்கிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கிடையாது. இருந்தாலும் படம் முழுவதும் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில், இந்த பிரச்னை பற்றி நுட்பமாக படமாக்கப்பட்டுள்ளதை ட்ரைலர் உணர்த்துகிறது.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை இந்த படத்தில் நேரடியாக பயன்படுத்தியுள்ளார். இந்த டால்பின் கறி விற்பனையின் வர்த்தகத்துக்குள் பின்னால் இருக்கும் மறைமுக சம்பவங்களை, உள்ளுக்குள் புகுந்து அசாத்தியமாக படமாக்கியுள்ளார். பூமியில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு, ஆழ்கடல் அழிப்பு போன்றவற்றை தத்ரூபமாக படமாக்கியுள்ளார்.

'இந்த சம்பவங்களுக்கு நாம் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை படம் எழுப்பும். இந்த உலகத்தின் விதியை புரிந்து கொள்ளுங்கள். இந்த படத்தை பார்க்க தவறாதீர்கள்' என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த படம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், படத்தின் தலைப்புக்காக வைக்கப்பட்ட சொல் சக்தி வாய்ந்தது. அது என்னவென்றால் 'ரேசிங் எக்ஸ்டிங்ஷன்' (Racing Extinction). 'துணிவான வழிகளை பெறுங்கள்' என்பது அர்த்தம்.

உங்கள் ஊர் தியேட்டருக்கு எப்போது வரும் என்பதை, படத்தின் அலுவல் வெப்சைட்டில் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

-த. ஜெயகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close