இதுவரை இல்லாத புதியவகை பேய்ப்படம்! இன்சிடியஸ் திரை அலசல்! | Insidious Chapter 3 Movie Review!

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (01/07/2015)

கடைசி தொடர்பு:16:30 (01/07/2015)

இதுவரை இல்லாத புதியவகை பேய்ப்படம்! இன்சிடியஸ் திரை அலசல்!

பேய் இருக்கா இல்லையா? பேய் வருவதற்கு ஏதும் அறிகுறி இருக்கான்னு கேள்வி கேட்டா பதில் யாரிடமும் இருக்காது. ஆனாலும் பேய் என்றால் நமக்கு பயம் வரத்தான் செய்யும்.

ரசிகர்களை பயத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் ஹாலிவுட்டின் அடுத்தபேய்ப் படம் ரிலீஸாகிவிட்டது. இன்சிடியஸ்  படத்தின் மூன்றாம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலக பேய் விரும்பிகளை பயத்தில் உருட்டி வருகிறது.

மந்திரவாதியோ, பாதிரியாரோ பேய் விரட்டித்தானே பார்த்திருக்கிறீர்கள். ஆனா இன்சிடியஸ்  மூன்றாம் பாகத்தில் பேய் பிடித்திருக்கும் பெண்ணே பேயை விரட்டுகிறார்.  அதனால் காமெடி பேய் என்றெல்லாம் எண்ணிவிடவேண்டாம். சீரியஸான பேய் தான். சரி, படத்தோட கதை தான் என்ன? 

தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் க்யூன் ப்ரன்னர். அவளுடைய தாயார் நீண்ட நாட்களுக்கு முன் புற்றுநோயால் இறந்துவிடுகிறார். தன் தாயின் பிரிவில் மனது உடைந்து  கிடக்கும் கதாநாயகி எப்படியாவது தன் தாயிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அந்த ஊரில் ஆவிகளிடம் பேசும் ஒரு வயதான லேடியிடம் உதவியை நாடுகிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது.

ஆனாலும் க்யூனுக்கு யாரோ தன்னிடம் பேசவருவதாகவும், தன்னைப் பார்ப்பதாகவும் உணர்கிறாள். ஒருவேளை தன் தாயாக இருக்கலாம் என்று நினைக்கிறாள். தொடர்ந்து  இவளுக்கு கார் விபத்து ஏற்படுகிறது, அடுத்தடுத்து அசம்பாவிதங்களை சந்திக்கிறாள் நாயகி.

ஒரு கட்டத்தில் அந்த ஆவி இவளைப் போட்டு புரட்டி எடுக்கிறது. வேறு வழியில்லாமல் பேயைப் பிடித்து பெட்டியில் அடைக்கும்  பேய் பிடிக்கும் நிபுணர்கள் இருவரைக் கூட்டிவந்து பேயை ஓட்ட நினைக்கிறார்கள். ஆனால் அந்த பேய் இவர்களையும் அடித்துத் துவைத்துவிடுகிறது.

பேயாக வந்து பயமுறுத்துவது அவளுடைய அம்மா இல்லை, வேறு யாரோ என்பது தெரிகிறது. இறுதியில் ஆவிகளிடம் பேசும் உள்ளூர் மந்திரவாதியான  வயதான முதியவரின் உதவியுடன் அந்தப் பேயை விரட்டினார்களா இல்லையா என்பதே மீதிக் கதை.

க்ளைமேக்ஸில் பேயின் வசமிருக்கும் நாயகியான க்யூன் பேயிடமே சண்டைபோட்டு பேயை விரட்டிவிடுவது பேய் சப்ஜெட்டுகளில் புதுவித டெக்னிக். வாயில் மாஸ்க் வைத்துக்கொண்டு பார்ப்பதற்கே அகோரமான ஒரு உருவம், ஒரே வீட்டுக்குள்ளேயே பயத்தை ஏற்படுத்தும் மேக்கிங், பக்காவான ஒளிப்பதிவு. படத்திற்கு ப்ளஸ். ஆனாலும் இன்னும் கொஞ்சம் பயம் காட்டியிருக்கலாம். முந்தைய பாகங்களை ஒப்பிடும் போது படத்தின் மதிப்பு கொஞ்சம் குறைவுதான். 

:) பி.எஸ்.முத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close