அமெரிக்க பெற்றோர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் ’எல்சா’

 2013ம் ஆண்டு டிஸ்னியின் இளவரசிகள் சார்ந்த பட வரிசையில் வெளியாகி மெகா ஹிட்டடித்த படம் ‘ஃப்ரோஸன்’. அனிமேஷன் 3டி படமாக வெளியான இப்படத்திற்கு தயாரிப்பு வால்ட் டிஸ்னி. இந்த படத்தின் கேரக்டர்களான ஹீரோயின்கள் எல்சா, ஆன்னா, மேலும் ஹீரோ கிரிஸ்டோஃப், பனிபொம்மை ஓலாஃப் என படத்தின் அத்தனை கேரக்டர்களும் மிக பிரபலம். 

இந்த படம் சிறந்த அனிமேஷன் படம் மற்றும் சிறந்த பாடலுக்காக இந்த படத்தின் ‘லெட் இட் கோ’ பாடல் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டியது. இப்போதுவரை இணையத்தில் எல்ஸா உடைகள், ஃப்ரோஸன் பார்ட்டி தீம், என வித விதமான வகைகளில் பிரபலமாக உள்ளது ஃப்ரோஸன் படம். 

அதிலும் டிஸ்னி இளவரசி படங்களிலேயே ‘எல்சா’ தான் முடி சூடிய முதல் ராணி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த கட்டமாக அமெரிக்காவின் பல தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ‘எல்சா’ ,ஆன்னா என பெயர் வைப்பதை வழக்கமாக்கி வருகிறார்கள். 

சென்றவருடம் மட்டும் அமெரிக்காவில் 1,131 குழந்தைகள் பிறந்துள்ளது என அமெரிக்க அரசாங்க பதிவேட்டில் உள்ளது. அதில் 286 குழந்தைகளுக்கு ‘எல்சா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதிகம் வைக்கப்படும் பொதுவான பெயர் லிஸ்டில் ‘ஃப்ரோஸன்’ படத்தின் எல்சா பெயர் முதலிடம் பிடித்துள்ளது. 

இதனால் படக்குழு படத்திற்கு குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் கிடைத்துள்ள வரவேற்பால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இந்த படத்தின் மூலம் தான் ஜெனிஃபர் லீ வால்ட் டிஸ்னியின் முதல் அனிமேஷன் படங்களின் பெண் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.  அவரே படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை , திரைக்கதை எழுதி இயக்க உள்ளார். எல்சாவாக ஐடினா மென்ஸெலே குரல் கொடுக்க இருக்கிறார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!