ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பாகம் 8....டீமில் இணைந்த இரண்டு புது நடிகர்கள்! | Fast & Furious 8....Two New Cast in Team

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (13/07/2015)

கடைசி தொடர்பு:16:31 (13/07/2015)

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பாகம் 8....டீமில் இணைந்த இரண்டு புது நடிகர்கள்!

கார் மற்றும் ஹாலிவுட் பிரியர்களின் டாப் விருப்பப் படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படங்களின் பாகங்களுக்கு ஒரு தனி சிறப்பிடம் இருக்கும் . இதுவரை 7 பாகங்களாக வெளியான இந்த படத்தின் மோகம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை.

துணிச்சலான சேஸிங் காட்சிகள், ஆக்‌ஷன் சீன்கள், முக்கியமாக உலகின் டாப் கார்கள் என படம் பரபரப்பு படலம் தான். அந்த வகையில் இந்த படத்தின் 7ம் பாகம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்தியாவில் பெருந்தொகையை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இதன் அடுத்த பாகத்தின் வேலைகளில் படக்குழு ஆழ்ந்துள்ளது.

வழக்கமாக வின் டீசல், ட்வைனி ஜான்சன், ஜேஸன் ஸ்டேத்தம், மைக்கேல் ரோட்ரிக்கஸ், உள்ள இந்த குழுவில் புதிதாக இரண்டு நடிகர்கள் அடுத்த பாகத்திற்காக இணைந்துள்ளனர். மேலும் இதன் ஆஸ்தான நடிகர்களின் ஒருவரான பால் வாக்கர் மரணம் அடைந்ததால் அவரது தம்பி அவரது கேரக்டரில் நடிப்பார் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. 

2017ல் வெளியாகும் என கூறப்படும் இப்படத்தில் ரியான் கோஸ்லிங், மற்றும் ஈவா மென்டிஸ் இருவரும் இணைந்துள்ளனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட ஜேஸன் ஸ்டேத்தம் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதுதான் 8ம் பாகமாம். அதில் இவர்கள் இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை படக்குழு மிக ரகசியமாக வைத்துள்ளனர். எப்படியாயினும், இப்போதே அடுத்த பாகத்திற்கான ஃபீவரை துவக்கிவிட்டுள்ளனர் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் க்ரூப். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்