புது சாதனை படைத்த மினியன்ஸ்!

 ஹாலிவுட் அனிமேஷன் ரசிகர்களின் லிஸ்டில் எப்போதும் இந்த மினியன்களுக்கு தனி இடம் உண்டு. சமீபகாலமாக முகநூல், ட்விட்டர், வாட்ஸப் என பலரும் தங்களது புரொஃபைல் போட்டோக்களாக மினியன்களை பயன் படுத்தத் துவங்கிவிட்டனர்.மேலும் பலரது ரிங் டோன் இந்த மினியன்களின் பானானா பாடல் தான். 

இந்நிலையில் இந்த மினியன் கேரக்டர்கள் முதல் முதலில் பியர் கோஃபின், இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘டிஸ்பிகபிள் மி 1 மற்றும் 2 படங்களின் மூலம் குணச்சித்திர ரோலில் அறிமுகப்படுத்தப்பட்டன. மஞ்சள் வண்ணத்தில் வழைப்பழம் போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினியன்கள் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் அதிகம் கவர்ந்தவை என்றே கூற வேண்டும். 

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீக்குவல் எனப்படும் முந்தைய பாகம் மூன்றாம் பாகமாக தற்போது வெளியாகியுள்ளது. அதாவது மினியன்களின் தோற்றம். அதுதான் படத்தின் கதையாக ‘மினியன்ஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் வரும் வாரம் வெள்ளியன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்குள் உலகம் முழுக்க ‘மினியன்ஸ்’ படம் வசூலில் புது  சாதனை படைத்துள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபீசை மொத்தமாகாவே தனதாக்கியுள்ள மினியன்ஸ் படம் உலகிலேயே வசூலில் அதிகம் பெற்ற இரண்டாவது படமாக மாறியிருக்கிறது. 

’இதற்கு முன்பு ’ஷ்ரெக் த தேர்ட்’ படம் மட்டுமே முதல் இடத்தில் முதல் வாரத்தில் 121.6 மில்லியன்கள் வசூல் செய்த படமாக இருக்கிறது. இதனையடுத்து 110.3 மில்லியன்களுடன் டாய்ஸ் ஸ்டோரி படங்கள் இருந்துவந்த நிலையில் ‘மினியன்ஸ்’ 115.2 மில்லியன் வசூலித்து டாய்ஸ் ஸ்டோரி படங்களின் சாதனையை முறியடுத்துள்ளது. உலகின் அதிகம் வசூலித்த அனிமேஷன் படங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மேலும் உலகம் முழுக்க 30 நாடுகளில் வெளியாகியுள்ள மினியன்ஸ் மொத்தமாக 280.5 மில்லியன்களை வசூலித்து பல நாடுகளில் அந்த நாடுகளில் சொந்த படங்களையே பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருப்பதுதான் ஆச்சர்யம். இந்த மினியன்ஸ் புயல் தற்போது இந்தியாவை வரும் வெள்ளியன்று தாக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!