007 தீம் பாடலை பாடப்போவது யார்....ஸ்பெக்டர் அப்டேட்! | Who Gonna Sing for 007 Theme...

வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (16/07/2015)

கடைசி தொடர்பு:16:26 (16/07/2015)

007 தீம் பாடலை பாடப்போவது யார்....ஸ்பெக்டர் அப்டேட்!

 ஹாலிவுட் பிரியர்களின் முதல் லிஸ்ட் படமெனில் அது ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்கள் தான். இந்தியாவைப் பொருத்த மட்டில் ஹாலிவுட் சினிமா என்றாலே ஜேம்ஸ் பாண்ட் படங்களும் ஜாக்கி சான் படங்களும் தான் முதலில் ரசிக்க பட்டவை என்றே சொல்லலாம்.

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே கார், டெக்னாலஜி, ஆக்‌ஷன் காட்சிகள், எல்லாவற்றிற்கும் மேல் பெண்கள் நடனம் ஆடும் 007 தீம் பாடல்கள் சிறப்பு. அந்த வகையில் ‘ஸ்பெக்டர்’ படத்தின் தீம் பாடலை ஆஸ்கர் புகழ் பாடகி ‘எல்லி கௌட்லிங்’ பாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதற்கான ஹிண்டையும் ட்விட்டரில் தட்டிவிட்டுள்ளார் எல்லி. இது ஜேம்ஸ் பாண்ட் சம்மந்தப்பட்ட விஷயம் எனில் நானும் சந்தோஷப்படுவேன் எனக் கூறியுள்ளார். எல்லீயின் பாடல்களுக்கு நம் இந்தியாவிலேயே கூட ரசிகர்கள் அதிகம். ஏன் த்ரிஷாவே சமீபத்தில் இவரின் ‘50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே’ பாடலைப் பாடி டப்ஸ்மாஷ் வீடியோ ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.. 

’ஃப்ரோஸன்’ படத்தின் ‘லெட் இட் கோ’ படலுக்கு இவர் ஆஸ்கர் விருது பெற்றார். இவர் இப்போது 007 தீம் பாடல் பாட இருப்பது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close