பெண்களே தேவையில்லை: மினியன்ஸ் இயக்குநரின் ஷாக் பதில்!

 மொபைல் கவர், மொபைல் வால்பேப்பர், கீ செயின், ரிங் டோன், சாப்பிடும் திண்பண்டங்கள், படுத்து உறங்கும் பெட், தலையணை என அனைத்திலும் மினியன்ஸ். அந்த அளவிற்கு பலரும் மினியன் புகழ் பாட ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு இந்த கேரக்டர்கள் உலக அளவில் அனைவரையும் கவர்ந்த கேரக்டர்களாக வலம் வருகின்றன. 

சமீபத்தில் இந்த மினியன் கதாபாத்திரங்களை உருவாக்கிய இயக்குநர் பியர்ரி கோஃப்ஃபினிடம் இவ்வளவு புகழ் பெற்ற மினியன் கேரக்டரில் ஏன் நீங்கள் பெண் மினியன்களை உருவாக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு இயக்குநர் சொன்ன சுவாரஸ்யமான பதில், மினியன்களை நான் உருவாக்கியதே குழந்தைகளுக்காகவும் , குழந்தை மனம் கொண்ட பெரியவர்களுக்காகவும் தான். பெண் மினியன்களை நான் உருவாக்கினால் கண்டிப்பாக காதல், ரொமான்ஸ், இதர பல விஷயங்களும் புகுத்த வேண்டிவரும். அப்படி நான் குழந்தைகளை ஒரு நல்ல கேரக்டர்களைக் கொண்டு திசை திருப்ப விரும்பவில்லை எனக் கூறியுள்ளார் பியர்ரி. 

எத்தனையோ குழந்தைகளுக்கான கேரக்டர்கள் உலகில் உள்ளன. ஏன் பலரையும் கவர்ந்த டாம் அண்ட் ஜெர்ரி சீரியல்களில் கூட பெண் பூனைகள், ஆண் சுண்டெலி என இடம்பிடித்து காதல், அதற்காக நடக்கும் போட்டிகள் என பணம் பார்க்கும் இக்காலத்தில் இயக்குநரின் இந்த பதில் அவர் உண்மையாகவே குழந்தைகளை நேசிப்பது கண்கூடாக தெரிகிறது என பலரும் பாராட்டாத் துவங்கியுள்ளனர். இந்த மினியன்களை உருவாக்கியவர் மட்டுமெ பியர்ரி இல்லை அவைகளுக்கு குரல் வடிவமும் இவர்தான் . 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!