நடிகைவீட்டு நீச்சல் குளத்தில் 21 வயது வாலிபரின் உடல்: தொடரும் மர்மம் | A dead Man's Body In Demi Moore's Swimming Pool!

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (22/07/2015)

கடைசி தொடர்பு:13:35 (22/07/2015)

நடிகைவீட்டு நீச்சல் குளத்தில் 21 வயது வாலிபரின் உடல்: தொடரும் மர்மம்

ஹாலிவுட்டின் டாப் நடிகையான டேமி மூர். சார்லீஸ் ஏன்சல்ஸ்: ஃபுல் த்ராட்டில், ஹாஃப் லைட், பாபி, போன்ற பல படங்களில் நடித்தவர் டேமி மூர். இவரது பெயரில் இருக்கும் வீட்டின் நீச்சல் குளத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு 21 வயது மதிக்கத்தக்க வாலிபரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

சினிமா உலகினரை கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் இவரது பெயர் எடெனில்சன் வேல்லே, வயது 21. இவர் ஒரு ஓவியர் மற்றும் தேர்ந்த புகைப்பட கலைஞர் என தெரியவந்துள்ளது. தனக்கென பணியில் எப்போதும் மூழ்கியிருக்கும் எடெனில் யார் பிரச்னைக்கும் செல்ல மாட்டார் எனவும் அமைதியானவர், நல்லவர் என்றும் அவரது நண்பர்கள் சான்றுகள் கொடுத்துள்ளனர். 

லாஸ் ஏஞ்சல்ஸின் பல இடங்களை தனது கேமராவில் பதிந்திருக்கும் எடெனில் டெமி மூர்ர்ன் நீச்சல் குளம் மற்றும் வீடு ஆகியவற்றையும் கூட படமெடுத்திருக்கிறார். போலீஸார் விசாரணையில் அந்த நபர் நீச்சல் குளத்தில் விழுந்த பின் இறந்ததாகவும் அவரது பெயர் எடெனில்சன் வேல்லே (21) என்றும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்தபோது டெமி மூர் மற்றும் அவரது குழந்தைகள் ஆகியோரும் வெளியூருக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

என் பணியாளர்கள் நான் இல்லாத வேலையில் பார்டிகள் நடத்தியிருக்கிறார்கள். அந்த வேளையில் கூட அந்த நபர் இங்கே வந்திருக்கலாம். மேலும் இறந்த வாலிபருக்கு எனது இரங்கல் எனவும் தெரிவித்துள்ளார் டெமி மூர். நான் அவ்வேளையில் என் குழந்தையின் பிறந்தநாள் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸிலேயே இல்லை எனக் கூறியுள்ளார். எனினும் போலீஸ் விசாரணைகள் நடந்த வண்ணம் உள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close