மிக அதிக உக்கிரத்துடன் மிஷன் இம்பாசிபில் ஐந்தாம்பாகம், எகிற வைக்கும் எதிர்பார்ப்பு | mission impossible Movie Comes Aug 7!

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (23/07/2015)

கடைசி தொடர்பு:13:51 (23/07/2015)

மிக அதிக உக்கிரத்துடன் மிஷன் இம்பாசிபில் ஐந்தாம்பாகம், எகிற வைக்கும் எதிர்பார்ப்பு

மிஷன் இம்பாசிபிலையும், ஈத்தன் ஹண்டையும் விரும்பாத ஹாலிவுட் பிரியர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு கடந்து இருபது வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் பெயர் அது. 1960 ஆம் ஆண்டின் இறுதியில் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்து பின்னர் பல பாகங்களாக திரையில் கலக்கிவரும் படம் தான் மிஷன் இம்பாசிபில்.

ஈத்தன் ஹன்ட் என்ற பெயரில் ஹீரோவாக நடித்து உலகையே அதிரடித்துவரும் பிரபல நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் இப்படத்தின் ஐந்தாவது பாகம் வெளியாகவிருக்கிறது.
படத்தைப் பற்றி கூறும்போது, “ஒவ்வொரு தடவையும் இதை விட என்னால் சிறப்பாக செய்ய முடியாது என்று எண்ணியே படத்தை முடிப்பேன் . ஆனால் அடுத்த பாகத்தைத் துவங்கும் போது  முன்னர் செய்ததை விட சிறப்பாகச் செய்ய வேண்டும் என தீர்மானித்து சிறப்பாக செய்து முடிக்கிறேன்.

சண்டைக்காட்சிகளில் இது வரை இருந்ததை விட முனைப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிக தீர்மானமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. படம் பார்க்க வரும் ரசிகர்கள் இந்த படத்தில் வரும் சாகசங்களை  , அவர்களே செய்கிற மாதிரி நம்ப வைக்கக் கூடிய வகையில் தான் காட்சி அமைப்பு இருக்கும் , படமாக்கப்பட்ட விதமும் இருக்கும்.

தொலைக் காட்சித் தொடராக வந்ததிலிருந்து 'மிஷன் இம்பாசிபல் ' ஒரு உயர் கட்ட அழுத்தத்தைக் கதையின் மையக் கருத்தாகக் கொண்டு இருக்கும் . இந்த 'மிஷன் இம்பாசிபில்:முரட்டு தேசம்' பாகத்திலும் அது தொடரும் , முன்பை விட அதிக  உக்கிரம் இருக்கும்' எனக் கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான டாம் க்ருஸ். உலகெங்கும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வெளி வர உள்ளது 'மிஷன் இம்பாசிபில்'.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்