உயிருக்கு ஆபத்தான காட்சிகளில் டூப் போடாமல் நடித்த டாம் க்ருஸ் | Tom Cruse Says No for Dupe!

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (29/07/2015)

கடைசி தொடர்பு:15:40 (29/07/2015)

உயிருக்கு ஆபத்தான காட்சிகளில் டூப் போடாமல் நடித்த டாம் க்ருஸ்

டாம் க்ருஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மிஷன் இம்பாசிபிள்:ரோக் நேஷன்’ (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. அதிர வைக்கும் காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென ரசிகர்களை கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் இந்த பாகம் ரசிகர்களுக்கு மேலும் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளதாம்.

படத்தின் மோட்டார் ஸ்டண்ட் பயிற்சியாளர் வேட் ஈஸ்ட்வுட் கூறுகையில் “எத்தகைய ஸ்டண்ட் காட்சியையையும் ஒரு படி மேல் செய்ய வேண்டும் என்று முயற்சி எடுப்பவர் டாம் க்ரூஸ். ‘ரோக் நேஷன் படத்தில் வரும் டாம் க்ரூஸின் ரேஸ் கார் மற்றும் பைக் சேசிங் காட்சிகளை வேறெந்த சாகச வீரரையும் வைத்து டூப் போடாமல் பல நாள் பயிற்சிக்கு பின் தானே மேற்கொண்டுள்ளாராம்.

BMW நிறுவனத்தின் M3 காரின் உறுதியும், திறமும் டாம் க்ரூஸின் ஆபத்து நிறைந்த கார் சேசிங் காட்சிகளுக்கு பேருதவியாய் இருந்தது.”எனக் கூறினார். “ மேலும், சுட்டெரிக்கும் வெயில் முதல், தேள்கடி வரை என கடினமான சூழ் நிலைகளில் மிஷன் இம்பாசிபிள் ஐந்தாம் பாகம் படத்தை படமாக்கியுள்ளோம்.

பற்பல தெருக்களின் குறுகிய வளைவுகளிலும் இருக்கும் சேசிங்கும் அதை தொடர்ந்து வானுயர் கட்டிடங்களின் இடையே நடக்கும் ஹெலிகாப்டர் சீனும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என ஜேக் மேயர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.  ஆக்ஸ்ட் மாதம் 17ம் தேதி இந்த படம் தமிழில் மிஷன் இம்பாஸிபில்: முரட்டு தேசம் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close