’ஜுமாஞ்சி’ ‘அலாதீன்’ ரீமேக் அறிவிப்பு: ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!

 1995ம் ஆண்டு மறைந்த மாபெரும் நடிகர் ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘ஜுமாஞ்சி’ ஒரு தாயம் விளையாட்டு அதில் இருந்து வரும் ஆபத்துகள் என மையக் கதையாக ஃபேண்டஸி படமாக வெளியான இப்படத்தின் விலங்குகள் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் பாராட்டுகளை பெற்றவை. 

தற்போது இந்த படத்தை இக்கால தொழில்நுட்பம் கொண்டு இன்னும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ரீமேக் செய்ய இருப்பதாக சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ராபின் வில்லியம் இறந்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில் இப்படி ஒரு செய்தி அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

பலரும் சோனியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பாக ட்விட்டர் மற்றும் சமூக வலைகளில் ஸ்டேட்டஸ் போட்டு வருகிறார்கள். எப்பேற்பட்ட நடிகராக இருப்பினும் ராபின் வில்லியம்ஸ் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்த இயலாது. இந்த ரீமேக் அவருக்கு செய்யும் அவமரியாதை என கொதித்தெழுந்துள்ளனர். 

இதே போல் வால்ட் டிஸ்னி தனது புகழ் பெற்ற ‘அலாதீன்’ கார்டூனின் ப்ரீக்குவல் எனப்படும் முன்பாகத்தை எடுக்க இருக்கிறார்கள். அதாவது பூதமாக வரும் ஜீனியின் தோற்றம் அவர் ஏன் அந்த விளக்குக்குள் சென்றார் என்ற கதையாக உருவாக உள்ளது அலாதீனின் புது படம். 

இப்போதுவரை கார்டூன் உலகின் முடி சூடா ராஜாவாக திகழும் அலாதீன் கதையில், ஜீனி பூதத்திற்கு குரல் கொடுத்தவர் ராபின் வில்லியம்ஸ் என்பதால் இதற்கும் மக்கள் மத்தியில் வரவேற்புகள் இல்லை. பலரும் வேண்டாம் என்றே சமூக வலைகளில் கருத்துகளை பரிமாறி வருகிறார்கள். ஜீனியின் சிறப்பே அவரது குரலும், உணர்வுகளும் தான் அதை யாராலும் கொடுக்க முடியாது என கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!