சினிமா பிரியர்களுக்காக டாரண்டினோவின் அடுத்த படைப்பு!

டாரண்டினோவை அறியாத  உலக சினிமா ரசிகன் இருக்க முடியாது. ஆரம்ப காலத்தில் டிவிடி கடையில் வேலை பார்த்த க்வெண்டின் சினிமாவின் மேல் கொண்ட தீராப்பசியால் ஹாலிவுட்டில் அடியெடுத்துவைத்தவர். இது வரை அவர் இயக்கி இருப்பது எட்டே எட்டுப் படங்கள் தாம். ஆயினும் ஒவ்வொன்றும் தனக்கே உரிய பாணியில் சினிமா வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன.

க்வெண்டின் டாரண்டீனோவின் எட்டாவது படம் தான் “தி ஹேட்ஃபுல் எயிட்”. இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் படத்தை குறித்த ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.  அமெரிக்காவின் சிவில் வாரின் பின்னணியில் நடைபெறுகிறது இந்தப்படத்தின் கதை.

`தூக்குத் தண்டனையை நிறைவேற்ற கைதியுடன் வரும் ஜான் (கர்ட் ரச்செல்)  8 நபர்களை கடும் பனிப்பொழிவின் மத்தியில் சந்திக்க நேர்கிறது. பின்னர் தண்டனை நிறைவேற்றப்படுகிறதா, இந்த எட்டுப் பேரின் நோக்கம் என்ன? இதுவே கதையின் களம் என ஊகிக்கின்றனர் டாரண்டீனோ வெறியர்கள்.

மேஜர் கோமான் வாரன் ஆக சாமுவேல் எல்.ஜாக்சன், டெய்ஸி டொமெர்க்யூ ஆக ஜெனிபர் ஜேசன் லீ, ஜான் ரூத், ஆக கர்ட் ரஸ்ஸல் , கிறிஸ் மானிக்ஸ் ஆக வால்டன் காகின்ஸ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

 இந்தத் திரைப்படம் 70 எம் எம்  இல் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக 35 எம் எம்   ஃபிலிமில் தான் படங்கள் எடுப்பது வழக்கம். ஆனால 70 எம் எம் இல் காட்சி இன்னும் தெளிவாக, விரிவாகக் காண்பிக்க இயலும். டாரன்டீனோ இந்த படத்தின் அறிவிப்பை 2013 ஆம் ஆண்டே கொடுத்துவிட்டார். இடையில் கதையை யாரோ வெளியிட, படத்தை கைவிட்டுப் புத்தகமாக வெளியிட முடிவு செய்தார்.  நடிகர்களுடன் ஒத்திகை பார்த்ததும் மறுபடியும் 2015 ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடவும் போகிறார். இந்தியாவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும்.

தி ஹேட்ஃபுல் எயிட் பட டிரெய்லர்:

ஐ.மா.கிருத்திகா  (மாணவப்பத்திரிகையாளர்)
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!