ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கும் நடிகை!

 ஹாலிவுட்டின் டாப் நாயகி ஜெனிபர் லாரன்ஸை பிடிக்காத ஆளே இல்லை என்லாம். ஹாலிவுட் முதல் நம்மூர் வரை ஜெனிபருக்கு ரசிகர்கள் அதிகம். மேலும் ‘தி ஹங்கர் கேம்ஸ்’ படம் மூலம் பிரபலமானவர் ‘அமெரிக்கன் ஹஸ்ட்ல்’ படம் மூலம் ஆஸ்கர் புகழ் நாயகியாக மாறினார். 

குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தவர் இப்போது ஹாலிவுட்டின் டாப் ஹீரோயின். ஒரு நாள் சம்பளம் என்பதை கணக்கிடும் பழக்கம் ஐடி துறையில் தான் இருப்பார்கள். ஒரே வருடத்தில் 336 கோடிகளை சம்பாதித்த பட்டியலில் சென்ற வருடம் ஜெனிபர் டாப் இடம் பிடித்தார். 

அப்படி என்னதான் சம்பளம் வாங்குகிறார் எந்த அடிப்படையில் வாங்குகிறார் என விசாரித்ததில் இந்திய மதிப்பில் ஒரு நாள் சம்பளம் ஒரு கோடி என அதிர்ச்சிக் கொடுக்கிறது ஹாலிவுட் தரப்பு. 25 வயதில் ஒரு நாள் சம்பளம் ஒரு கோடியா  அடப்போங்கப்பா எங்க மொத்த வாழ் நாள் சம்பளமே அவ்ளோ வராது அதுதானே உங்கள் மைண்ட் வாய்ஸ் , சேம் மைண்ட் வாய்ஸ்! 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!