ஹாலிவுட்டின் ஹாரர் கிங் வெஸ் கிரேவர் காலமானார் | Master horror director Wes Craven has died

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (01/09/2015)

கடைசி தொடர்பு:16:22 (01/09/2015)

ஹாலிவுட்டின் ஹாரர் கிங் வெஸ் கிரேவர் காலமானார்

ஹாலிவுட்டின் டாப் ஹாரர் படங்களின் இயக்குநரான வெஸ் கிரேவர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். தி ஹில்ஸ் ஹேவ் டூ ஐஸ், இன்விடேஷன் டூ ஹெல், நைட் மேர் ஆன் ELM ஸ்ட்ரீட், ஸ்க்ரீம் 1,2,3 , டைரி ஆஃப் த டெட், ட்ராகுலா 1,2,3 உள்ளிட்ட பல ஹாரர் படங்களை இயக்கியவர். ஹாரர் படங்களின் கிங் என செல்லமாகவும் அழைக்கப்படுபவர் வெஸ் கிரேவர். 

76 வயதான இவர் மூளை புற்றுநோயால் பாதிக்கபபட்டு பல போராட்டங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். ஞாயிறு அன்று லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள அவரது வீட்டில் அவர் இறந்து விட்டதாக அவரது குடும்பம் அறிவித்துள்ளது. 

அவரது மனைவியும் டிஸ்னி ஸ்டூடியோவின் தயாரிப்பு நிர்வாகியுமான இயா லபுன்கா இதனை உறுதி செய்துள்ளார். ஹாலிவுட்டின் பேய் படங்கள் பலவற்றை எடுத்து பார்த்தால் முக்கால்வாசி படங்கள் இவரது கை வண்ணத்தில் தான் உருவாகியிருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்