ஜேம்ஸ் பாண்ட் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல பாடகி...அதிர்ச்சியில் இசையுலகம்!

நம்மூரின் ரஜினி, கமல் படங்களை யாரெனும் மறுத்தாலே பெரிய சர்ச்சையாகிவிடும். அப்படி இருக்கையில் உலக சினிமாக்களில் வசூல் கிங்கான ஜேம்ஸ் பாண்ட் படத்தையே வேண்டாம் என நிராகரித்துள்ளார் பிரல பாப் பாடகி அடெல். என்ன இந்தப் பொண்ணு இப்படி பண்ணிட்டாங்க எனக் கேட்டால் உண்மையில் படக்குழுவுக்குத்தான் மிகப்பெரிய இழப்பு என்கின்றனர். 

உருவாகிவரும் ஜேம்ஸ் பாண்ட் 007 படமான ஸ்பெக்டர் படத்தின் தீம் பாடலைப் பாடுவதற்காக வந்த வாய்ப்பைத்தான் வேண்டாம் என நிராகரித்துள்ளார் அடெல். காரணம் இவர் இதற்கு முன் 2012ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படமான ஸ்கைஃபால் படத்தின் ஸ்கைஃபால் தீம் பாடலை இவர் தான் எழுதிப் பாடினார்.

அந்தப் பாடல் காணக்கிடைத்திடா அளவிற்கு பெரும் வெற்றியையும், புகழையும் அடைந்ததோடு, மேலும் ஆஸ்கரில் அந்த வருடத்திற்கான சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதையும் தட்டியது. தற்போது ஹீரோ டேனியல் க்ரெய்க், மற்றும் இயக்குநர் சாம் மெண்ட்ஸ் இருவரும் ஸ்பெக்டர் தீம் பாடலைப் பாடவேண்டும் எனக் கோரி கேட்க ஸ்கைஃபால் மிகப்பெரிய சாதனைப் படைத்த பாடல். அந்த சாதனையை முறியடிப்பது முடியாத காரியம்.

அதே சமயம் அந்தப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் என்னால் முடியாது எனக் கூறியுள்ளார் அடெல். எனினும் பல மில்லியன்களை சம்பளமகாத் தர படக்குழு முன்வந்த நிலையில் வேண்டாம் என நிராகரித்ததில் படக்குழு கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். அடெல் பாடிய பாடலை முறியடிக்க யாராலும் முடியாது.பல தேடலுக்குப் பிறகு கடைசியாக பாடலை சாம் ஸ்மித் பாடியுள்ளார். இதே போல் முன்பு ஒருமுறை ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தப் பெருமை நம்மூர் ஐஸ்வர்யா ராய்க்குத்தான் உள்ளது.  

 

 ஸ்பெக்டர் பாடல் டீஸருக்கு: 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!