வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (29/09/2015)

கடைசி தொடர்பு:13:35 (29/09/2015)

என் வாழ்க்கை இவர்கள் தான்...பிராட் பிட், ஏஞ்சலினா நெகிழ்ச்சித் தருணங்கள்!

 ஹாலிவுட் பிரபல நடிகர் , பிராட் பிட் தனது முகநூல் பக்கத்தில் தனது குடும்பப் புகைப்படங்கள் இரண்டை பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் , உணர்வுகளையும் வெளியிட்டுள்ளார். என்னதான் நான் பெயர் ,புகழ், அதீத பணம் சம்பாதித்தாலும் இந்தப் புகைப்படத்தில் அவையேதும் இல்லை. 

 

வேறு எந்த விஷயமும் என் கண்களில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துவிடாது. மேலும் ஏஞ்சலினா, என் குழந்தைகளை நான் காணும் இந்த கனிவானப் பார்வை கண்டிப்பாக வேறு எந்த விதத்திலும் கிடைக்காது. என் வாழ்க்கையின் அர்த்தம் இவர்கள் தான்.

இந்த அன்பு யாரிடமும் கிடைக்காது என ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் பலரும் நாங்களும் எங்கள் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறோம் என கமெண்டுகளால் நிறைத்து வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்