வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (08/10/2015)

கடைசி தொடர்பு:18:15 (08/10/2015)

007 படத்தில் நடிப்பதற்கு பதில் என் மணிக்கட்டை அறுத்துக்கொள்வேன் - டேனியல் கிரேக்!

 டேனியல் கிரேய்க் நடிப்பில் ஜேம்ஸ் பாண்ட் 007 சீரிஸ் படங்களின் வரிசையில் அடுத்தப் படமாக வெளியாகவிருக்கிறது ‘ஸ்பெக்டர்’. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் டீஸர் என வெளியாகி உலக அளவில் கலக்கி வருகிறது. 

இந்நிலையில் படப்பிடிப்பின் போது சின்ன விபத்து நடந்ததில் ஹீரோ டேனியல் கிரேய்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். 

அவர் பேசுகையில், நான் மீண்டும் ஒரு 007 படத்தில் நடிப்பதற்கு பதில் மணிகட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வேன், எனக் கூறி அதிர்ச்சி ஆக்கியுள்ளார். பிறகு தான் அவர் பேசியது காமெடி என தெரியவந்தது. எனினும் 007 படத்தில் நடிக்க வேண்டுமெனில் கண்டிப்பாக அதற்கு உடலளவில் கண்டிப்பாக தேர்ந்தவராக இருக்க வேண்டும். 

இனி நான் அடுத்து ஒரு 007 படத்தில் நடிக்கிறேன் எனில் கண்டிப்பாக அது பணத்திற்காக மட்டுமே இருக்கும். எனினும் என் உடல் எவ்வளவு நாள் ஈடு கொடுக்குமோ அதுவரை மட்டுமே. அதன்பின் கண்டிப்பாக 007 படங்களைத் தவிர்த்து விடுவேன் எனக் கூறியுள்ளார். 

ஸ்பெக்டர் படம் எதிர்பார்த்ததை விடவும் அருமையாக வந்திருக்கிறது. அக்டோபர் மாதம் இறுதியில் படம் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமையும் என மேலும் அவர் கூறியுள்ளார். ஸ்பெக்டர் தவிர்த்து அடுத்து ஒரு 007 படத்தில் ஒப்பந்தமாக உள்ளேன். 

அதன் பிறகு இந்தப் பட சீரிஸை இன்னும் நல்ல ஆற்றல் உள்ள எவரேனும் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் இதே வேளையில் வால்வோரின் புகழ் ஹியூக் ஜேக்மன் 007 படத்தில் நடிக்க வேண்டுமென்ற தனது  விருப்பத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்