ஆடையின்றி வெளியான புகைப்படம் - அதிர்ச்சியில் பிரபல பாடகர்! | American Media Released Pop Singer Justin Bieber's Nude photos creates Issue !

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (10/10/2015)

கடைசி தொடர்பு:15:40 (10/10/2015)

ஆடையின்றி வெளியான புகைப்படம் - அதிர்ச்சியில் பிரபல பாடகர்!

சமீபத்தில் அமெரிக்க  ஊடகம் ஒன்று பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 புகைப்படங்கள் கொண்ட அந்த ஆல்பத்தை கண்ட ஜஸ்டின் அதிர்ச்சியடைந்துள்ளார். பகிர்ந்த சில மணிநேரங்களில் இணையத்திலும் மளமளவென பரவ ஆரம்பித்தது, இதனால் சம்மந்தப்பட்ட மீடியாவின் மீது வழக்கு தொடரப் போவதாக பீபர் கூறியிருக்கிறார்.

இதனை விளக்கி சட்டப்படி கடிதம் ஒன்றினையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளனர் ஜஸ்டின் பீபர் தரப்பினர். இதில் ஜஸ்டின் பீபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இணையதளம், அதனை 12 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதே சமயம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். 

எப்படி இந்த புகைப்படங்கள் பரவின என விசாரித்ததில். ஜஸ்டின் தன் போரா போரா ட்ரிப்பின் போது அதை மீடியா புகைப்படக்காரர் ஒருவர் மறைந்திருந்து எடுத்ததாகக் கூறப்படுகிறது. எனினும் ஜஸ்டினின் நண்பர்களில் ஓருவரே அந்தப் புகைப்படங்களை மீடியாவுக்குக் கொடுத்துள்ளதாகவும் இன்னொரு சந்தேகம் எழுந்துள்ளது. 
 

இந்நிலையில் பாப் உலகில் தனக்கென தனி இடத்தையும், உலகளவில் அதிக ரசிகைகளையும் கொண்ட ஜஸ்டினுக்கு இந்தப் புகைப்பட விஷயம் பெரிதும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. எனினும் பலரும் இவர் போடும் இடுப்புக்குக் கீழான பேண்டை விட இது ஒன்றும் பெரிதாக இமேஜைக் கெடுத்துவிடவில்லை என அரசல் புரசலாகக் கிண்டலடிக்கிறார்கள். ஜஸ்டினின் அப்பாவே அவரது ஆடையில்லாப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து என்ன தான் சாப்பிடுகிறார்? ஒரு தந்தையாக எனக்குப் பெருமையாக இருக்கு என சமூக வலைதளத்தில் பகிர்ந்து கிண்டலடித்துள்ளது தான் ஹைலைட்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close