பிரியங்கா சோப்ராவுக்கு வெற்றி கிடைக்குமா?

முன்னாள் உலக அழகி பிரியங்காசோப்ரா பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அழகியும், பாலிவுட் டாப் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்க தொலைகாட்சித்  தொடர்  'கோண்டிகோ' வில் நடித்து வருகிறார், இதன் மூலம் சர்வதேச அளவில் அவரது புகழ் உயர்ந்துள்ளது.  அதிக பார்வையாளர்களைக்  கவர்ந்த தொடர் என்ற பெருமையும், இத்தொடருக்கு உள்ளது.

தற்போது பீப்பிள்ஸ் சாய்ஸ் எனும் விருதுப்பட்டியலில் மனம் கவர்ந்த டிவி தொடர் நடிகை என்ற விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.  நடித்த முதல் வருடத்திலேயே, முதல் முறையாக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தனக்குப் பெருமையாக உள்ளது என பிரியங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் பிரியங்கா சோப்ராவிற்கு ஓட்டுப் போட விரும்புகிறவர்கள், பீப்பிள்ஸ்சாய்ஸ்.காம் என்ற இணையதளத்திலும், ஃ பேஸ் புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் மூலமும் தங்கள் ஆதரவை அக்டோபர் 22 க்குள்  தெரிவிக்கலாம். இவ்விருதிற்கான முடிவுகள் ஜனவரி 6 அன்று அறிவிக்கப்படும்.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!