டைட்டானிக் நாயகன் இந்தியா வருவது எதற்காக? சுவராஸ்ய தகவல்

டைட்டானிக் , ஷட்டர் ஐலாண்ட், வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் போன்ற படங்களின் மூலம் நம் மனதை கவர்ந்த லியோனார்டோ டிகாப்ரியோ இந்தியா வர இருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுனிதா நரைன் கூறியுள்ளார்.

முன்னதாக 'தி 11த் ஹவர் ' எனும் இயற்கைச் சூழல் பற்றிய ஆவணப் படத்தில் தனது பங்கினை அளித்திருந்த லியோனார்டோ, தற்போது சுனிதா நரைன் எடுக்கப் போகும் இயற்கை பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலால் ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் ஆவணப் படத்திலும் தனது பங்கினை அளிக்கவுள்ளாராம்.

 இதற்கான வேலைகள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 29, 30 தேதிகளில் இதில் நடிப்பதற்காக லியோனார்டோ வர இருப்பதாக கூறியுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் உலக வெப்பமயமாதல் போன்றவற்றிற்கு  டிகாப்ரியோ குரல் கொடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பிரியாவாசு - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!