குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கேப்டன் ஸ்பேரோ! | Johnny Depp did a surprise visit to children hospital!

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (02/11/2015)

கடைசி தொடர்பு:16:47 (02/11/2015)

குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கேப்டன் ஸ்பேரோ!

'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்" சீரீஸ் படங்களின் மூலம் தனக்கென உலகளவில் ரசிகர் வட்டத்தை பெற்றவர் ஜானி டெப். கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போன இவரது நடிப்பினால் உலகமே இவரின் உண்மையான பெயரை மறந்து 'கேப்டன் ஜாக் ஸ்பாரோ' என அன்புடன் அழைக்க ஆரம்பித்தன.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஷாப்பிங், வெளிநாடுகளுக்கு சுற்றுலா என மற்ற பிரபலங்கள் பறந்து கொண்டிருக்க, கேப்டன் ஜாக் ஸ்பாரோவும், அவரது நண்பரும் சகநடிகருமான ஸ்டீபன் கிரஹாமும் (பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் ஸ்கரம் கதாபாத்திரத்தில் நடித்தவர்) குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர்.

கடந்த 2007-ம் ஆண்டு தனது மகள் லில்லி ரோஸ், கிட்னி பாதிப்பினால் லண்டனில் உள்ள கிரேட் ஒர்மாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட 9 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த மருத்துவமனைக்கு ஒரு மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கிய அவர், 2010-ம் ஆண்டிலிருந்து பல்வேறு குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு தனது ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தின் கெட்டப்பில் சென்று சர்ப்ரைஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.மேலும் குழந்தைகளுக்கு தங்கக் காசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவதும் ஜானியின் வழக்கம்.

இந்நிலையில், கடந்த சிலமாதங்களாக ஆஸ்திரலியா பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் 5-ம் பாகத்திற்கான ஷூட்டிங்கில் பிசியாக இருந்தவர் திடீர் விசிட்டாக பிரிஸ்பனில் உள்ள லேடி சிலேண்டோ குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்ல அங்குள்ள உள்ளவர்களின் ரியாக்சன் வீடியோ வடிவில் கீழே பார்க்கவும்.

வீடியோவிற்கு: 

 

- சுசித்ரா சீதாராமன் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்