வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (03/11/2015)

கடைசி தொடர்பு:17:47 (03/11/2015)

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம் ஸ்பெக்டர். ஏன் பார்க்க வேண்டும் ? ஒரு சின்ன அலசல்!

'ஜேம்ஸ் பாண்ட் 007' கிட்டத்தட்ட உலகின் கடைசிநிலை சினிமா ரசிகர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான என்பதை விட பொறாமை வரவழைத்த ஒரு நாயகன். பாண்ட் வரிசையில் இதுவரை 23 படங்கள் வெளிவந்திருக்கின்றன. 24-வது படமாக வெளிநாடுகளில் வெளியாகி லைக்ஸும் விமர்சனங்களும் குவித்துக் கொண்டிருக்கிறது 'ஸ்பெக்டர்’.

இந்தியாவில் கொஞ்சம் லேட்டாக நவம்பர் 20-ல் ரிலீஸ்.ஜேம்ஸ்பாண்ட் படங்களிலேயே அதிக வசூல் குவித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஸ்கைஃபால்’ தான். ஸ்கைஃபால் படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் கொடுத்த எதிர்பார்ப்புகளால் அதைத் தொடர்ந்து, ஸ்பெக்டருக்கும் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். அந்தப் படத்தை இயக்கிய சாம் மெண்டிஸ் தான் 'ஸ்பெக்டர்’ படத்தையும் இயக்கி இருப்பவர். இந்நிலையில் இந்தியாவில் இம்மாதம் வெளியாகவிருக்கும் ஸ்பெக்டர் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? இதோ ஒரு சின்ன அலசல்.

1. மெக்ஸிகோவில் நடைபெறும் 'டே ஆப் தி டெட்' திருவிழாவின் சலசலக்கும் மக்கள் கூட்டத்திலிருந்து, தி கிராண்ட் ஹோட்டல் லாபி பின்னர் ரூப் டாப் என எதிரியைக் கொல்லப் பறந்தோடும் நாயகன். சிட்டியின் மெயின் ஸ்கொயரில் ஹெலிகாப்டரில் நடைபெற்ற இந்த சண்டைக்காட்சியின் பைலட்டாக ரெட்புல் நிறுவனத்தின் ஏரோபாடிக் விமானி சுக் ஆரோன் பணியாற்றியுள்ளார். மேலும் இந்தக் காட்சிக்காக 107 மேக்கப் ஆர்டிஸ்டுகள் அவர்களுக்கு உதவியாக 1500 பேர், இவர்கள் தவிர 36 அடி உயரத்தில் 10 எலும்புக்கூடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்சியின் படப்பிடிப்பு நடந்தபோது தான் நாயகன் டேனியல் கிரேய்க் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2. கேசினோ ராயல் படத்தில் வரும் போர்ட் மான்டியோவை இனி மறந்துவிடலாம், ரோம் நகரில் இருக்கும் டைபர் நதியின் கரையில் நடக்கும் கார் சேஸிங் இதுவரையிலான பாண்ட் பட கார் சேஸிங்குகளை பீட் செய்கிறது. ஜாகுவர் நிறுவனத்தின் பவர்ஃபுல் மாடலான Jaguar C-X75 மற்றும் ஆஸ்டன் மார்டினின் DP10 ரக கார்களும் முதன்முறையாக ஆக்சன் அட்டகாசங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை இந்த மாடல் கார்கள் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே கார்கள் தான் சிறப்பு. இந்தப் படம் இன்னும் கண்களுக்கு விருந்து தரும்.

3.'ஸ்பெக்டர்’ படத்துக்காக நான்காவது முறையாக பாண்ட் அவதாரம் எடுத்திருக்கிறார் டேனியல் கிரேய்க். சில மாதங்களுக்கு முன்புவரை இதுதான் டேனியலின் கடைசி பாண்ட் படம் என செய்திகள் வெளியாகின. ஒரு பேட்டியிலும் 'இப்போதைக்கு இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்’ எனச் சொல்லியிருந்தார் டேனியல் கிரேக். ஆனால், அவர் வேண்டாம் என்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டும், அவரது ரசிகர்களும் விடுவதாய் இல்லை.எனவே, பரவாயில்லை என அடுத்த படத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எனவே டேனியலை நாம் 007 ஆகப் பார்க்க இன்னும் இரண்டு வாய்ப்புகளே. அதில் ஒன்று ஸ்பெக்டர். 

4.  நிறையத் தேடல்களுக்குப் பிறகு 'பாண்ட் கேர்ள்’ வேடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் பிரெஞ்ச் நடிகை லியா சீடவுக்ஸ் (Lea seydoux). இவருடன் போனஸாக இன்னொரு கேர்ளுக்கும் வாய்ப்பு தந்திருக்கிறது ஸ்பெக்டர். அவர்... இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சி. உலக சினிமா ரசிகர்களை 'மெலினா’ படத்தில் கிறங்கடித்தவர். 50 வயதானாலும் ரொமான்ஸ் குயின் என்பதால் மோனிகா ரசிகர்களும் பாண்ட் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டபுள் பொனான்ஸா!

5. 'ஸ்பெக்டரில்' சூப்பர் வில்லனாகக் களமிறங்குகிறார், கிறிஸ்டோப் வால்ட்ஸ். ட்ஜேங்கோ அன்செயிண்ட் (Django Unchained)  திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். ஜேம்ஸ் பாண்டின் வில்லனாகக் களமிறங்க எல்லோரும் வரிசையில் நிற்கிறார்கள். இவரோ, சாம் மெண்டிஸ்ஸின் கெஞ்சல்களுக்குப் பின்னர்தான் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

- சுசித்ராசீதாராமன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்