உலகப்புகழ் பெற்ற இ.டி படத்திற்கு கதை எழுதிய மெலிசா மரணம்!

 உலகப்  புகழ் பெற்ற இ.டி கதாபாத்திரம் மற்றும் அப்படத்திற்கு வசனம் எழுதிய   மெலிசா  மேத்திசன் (65) காலமானார்.1982 ல் வெளிவந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான இ.டி படத்தின் கதையை எழுதியவர் இவர்.

9 ஆஸ்கார் விருதுகளுக்கு இப்படம் அப்போது பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பீல்பெர்க் தயாரிப்புகளில் வெளிவந்த இப்படம் ஏகப்பட்ட விருதுகளை வென்றுள்ளது. 65 வயது நிறைந்த மெலிசா  மேத்திசன் வசனகர்த்தாவாகவும், பல படங்களுக்கு  இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் எழுதிய தி BFG , வால்ட் டிஸ்னி தயாரிப்பில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவாகிவருகிறது.

இ. டி யின் சிறந்த வசனத்திற்காக ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர் மெலிசா  மத்திசன். இவர் மேலும் 'தி  பிளாக் ஸ்டேசன் ', 'குந்தன்', 'தி இந்தியன் இன் தி கப்போர்டு ' 'டிவிளிக்  ஸோன்' போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

- பிரியாவாசு - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!