பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லிக்கு எச்.ஐ.வி?

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் எச்.ஐ.வி யால் கடந்த ஒருவருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். வால் ஸ்ட்ரீட்,போஸ்ட்மார்டம் , தி த்ரீ மஸ்கடீர்ஸ், மேஜர் லீக் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சார்லி ஷீன். எப்போதும் தலைப்புச்செய்திகளில் அதிகம் அடிபடும் சார்லிக்கு இப்போது எச்.ஐ.வி இருப்பதாக வெளியான செய்தி இணைய உலகையும், சினிமா உலகையும் பரபரப்பாக்கியுள்ளது.

டிவியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உயர்ந்த சார்லி, போதை,  ஆல்கஹாலுக்கு அடிமை ,கல்யாண வாழ்க்கையில் சர்ச்சை என எப்போதும் செய்திகளில் வலம் வருவார்.இப்போது எச்.ஐ.வி என தகவல் வெளியாகியுள்ளது. 

 

மூன்று திருமணங்களை செய்த சார்லி மூன்றாம் மனைவி ப்ரூக் மியுல்லருடன் ஏற்பட்ட விவாகரத்துக்குப் பிறகு ஆபாச படங்களின் நாயகி ப்ரீ ஓல்சனுடன் நெருங்கிப் பழகி வந்தார்.

 இன்று மாலை தனது ரத்தத்தில் எச்.ஐ.வி இருக்கிறதா இல்லையா என்பதை, அவரே உலகிற்கு அறிவிக்க இருக்கிறார் என்பது மேலும் பரபரப்பைத் தூண்டியுள்ளது. சில சந்திப்புகளில் அவரே, தான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறியிருக்கிறார் என்ற நிலையில் இந்தச் செய்தி ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!