அம்மாடி... சென்னை ஐமேக்ஸில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

ஐ-மேக்ஸ் சினிமாவின் காட்சி அனுபவத்தை அடுத்த உச்சத்துக்குக் கொண்டு செல்கிறது. இதற்குமுன் 3டி படங்களைப் பார்ப்பதும் அதில் திரையைத் தாண்டி உங்களை தாக்க வந்த பொருட்களைப் பார்த்து வியந்ததும் இப்போது அதுக்கும் மேலே செல்லவிருக்கிறது.

அது என்ன ஐ-மேக்ஸ்?

வழக்கமாக இதுவரை நீங்கள் பார்த்த திரைகளை விட இது மிகவும் பெரியது. ஸ்க்ரீன் அளவு மட்டுமல்ல, அதன் துல்லியமும், தொழில்நுட்பமும் கூட பல படிகள் மேலே இருக்கும். I-max என்பதே Image MAXIMUM என்பதன் சுருக்கம். அதனால் ஜுராசிக் பார்க் பார்க்கும்போது டைனோசர்கள் உங்கள் தோளுக்குப் பின் உலவும் உணர்வைக் கொடுக்கும்.

சென்னையின் முதல் ஐ-மேக்ஸ் எப்படி இருக்கும்?

நவம்பர் 20-ம் தேதி சென்னை, வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில்  ஐ-மேக்ஸ் திரையிடல் ஆரம்பம். வழக்கமான ஐ-மேக்ஸ் தியேட்டரின் அனைத்து வசதிகளும் இருக்கும் இந்த தியேட்டரில், 428 பேர் அமரலாம். மெகா நீள திரை, அதிரடிக்கும் ஒலி என தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய திரை அனுபவம் நிச்சயம்... உலகத் தரமாக இருக்கும். அந்த திரை அனுபவத்தை வாசித்தோ, கேட்டோ புரிந்து கொள்ள முடியாது. நேரில் பார்த்துதான் அசந்துபோக வேண்டுமாம். ஆனால், ஐ மேக்ஸ் திரையிடல் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்படும் படங்கள் மட்டுமே இங்கு அந்த ஸ்பெஷல் அனுபவத்தைக் கொடுக்கும். வரும் வெள்ளிக் கிழமை வெளியாகும்  ஜேம்ஸ்பாண்ட் படமான 'ஸ்பெக்டர்' அந்த அட்டகாச அதிரடி பரவசத்தைக் கொடுக்கும்.

எல்லாம் சரி... டிக்கெட் விலை எவ்வளவாம்? 360 ரூபாயாம். 3டி கண்ணாடிக்கு கூடுதல் 30ரூபாய் கட்டணம். இணைய தளத்தில் பதிவு செய்தால் இன்னும் கூடுதல் கட்டணமாகும், ஊப்ஸ்..!

120 ரூபாய் கொடுத்து பார்க்கிற படத்துக்கே, விமர்சனம்னு கழுவிக் கழுவி ஊத்துவாங்க நம்ம பசங்க. இதுல 360 ரூபாய் கொடுத்துப் பார்த்து சொதப்புனா, காசு வெட்டியே போட்ருவாய்ங்களே..!

- பா. ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!