வால்ட்டிஸ்னி விரட்டப்பட்ட கதை தெரியுமா? மிக்கி மவுஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

ங்களுக்கு ஓவியம் வரையத் தெரியாது என வால்ட் டிஸ்னியை ஆரம்ப காலத்தில் பல கம்பெனிகள் உதாசீனப்படுத்தியுள்ளன. ஆனால் அவர் இப்போது 22 ஆஸ்கர் விருதுகளுக்குச் சொந்தக்காரர். அவர் உருவாக்கிய கேரக்டரே உலகப் புகழ் கார்ட்டூன் கேரக்டர் மிக்கி மவுஸ். இன்று மிக்கி மவுஸ் பிறந்ததினம். உலகச் சுட்டிகளின் மனம் கவர்ந்த கேரக்டர்களில் மிக்கிமவுஸ்க்கு எப்போதும் முதலிடம் தான். 

அதிகாரப்பூர்வமாக இன்று தான் அறிமுகமானது மிக்கிமவுஸ் கேரக்டர். அமெரிக்காவின் அனிமேஷன் குறும்படமான ஸ்டீம்போட் வில்லி மூலம் நவம்பர் 18 , 1928ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் தான் மிக்கி மவுஸ் தன் முதல் திரைத்தோற்றம் எனலாம். மிக்கி தன்னை கேப்டனாக காட்டிக்கொண்டு ஜாலியாக படகோட்டிக்கொண்டிருக்கும் போது உண்மையான கேப்டன் பீட் வந்து சேர மிக்கியை பாலத்தில் கப்பலை நிறுத்தும்படி திட்டி அனுப்புகிறது.

இந்நிலையில் படகைப் பிடிக்க அவசரமாக மின்னி(பெண் மவுஸ்) ஓடி வர அதற்குள் படகு கிளம்பி விட கரையோரம் மின்னி தொடர்ந்து ஓடி வருவதைக் கண்ட மிக்கி, மின்னியைக் கிரேன் மூலம் தூக்கி படகில் சேர்க்கிறது. இப்படியாக ஏழு நிமிடங்கள் 22 நொடிகள் ஓடும் இந்தக் குறும்படமே முதல் மிக்கியின் அறிமுகப் படம். இதன் பிறகு இப்போது வண்ணமயமான மிக்கிமவுஸ் வெளியாகி உலகம் முழுக்க பிரபலமானது நாமறிந்ததே.

இதற்கு முதல் முதலில் குரல் கொடுத்தவரும் அந்தக் கேரக்டரை உருவாக்கிய வால்ட் டிஸ்னிதான். இப்பேர்ப்பட்ட மிக்கிமவுஸின் ஸ்டீம்போட் வில்லி 1998ம் ஆண்டு தான் அமெரிக்க தேசிய திரைப்பட போர்டில் இணைக்கப்பட்டது என்பதுதான் மிகவும் ஆச்சர்யம்.

மிக்கி அறிமுகமான ஸ்டீம்போட் வில்லி குறும்படத்திற்கு: 

 

- ஷாலினி நியூட்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!