ஜேம்ஸ்பாண்ட் படத்தில் முத்தக்காட்சிகள் வெட்டப்பட்டனவா? எகிறும் எதிர்பார்ப்பு

வெளிநாடுகளில் வெளியாகி ஹிட் அடித்துவரும் ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர் நாளை இந்தியாவில் வெளியாகிறது. சென்சார் பார்வைக்கு ஸ்பெக்டர் சென்ற போது பல காட்சிகளை நீக்கம் செய்தே வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்பெக்டர் படத்திற்கு சென்சார் போர்டு யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது இரண்டு முத்தக் காட்சிகள் மற்றும் இரண்டு வசனங்கள் நீக்கப்பட்ட பின்புதான் இந்த சான்றிதழ் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இப்பட நாயகனாக டேனியல், நாயகிகளுடன் நீண்ட நேர முத்தக் காட்சிகள் படத்தில் உள்ளனவாம். அதன் நீளத்தில் பாதி  கட் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் இடம்பெறும் தவறான வசனங்களும் கட் செய்து தூக்கப்பட்டுள்ளனவாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!