உங்கள் மொபைலை ஸ்டார்வார்ஸ் ஆயுதமாக மாற்றத் தயாரா?

உலகப்புகழ் பட சீரிஸ்களான ஸ்டார் வார்ஸ் சீரிஸ்களின் ஏழாம் பாகமான ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேகன் இன்று உலகம் முழுக்க வெளியாகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கிறிஸ்துமஸ் சிறப்பாக வெளியாகவிருக்கிறது.

 பலரும் அட நமக்கு எப்போதுமே தாமதம் தானா என நினைத்த வேளையில் கூகுளுடன் ஸ்டார்வார்ஸ் குழு இணைந்து ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளது. உங்கள் கணினியின் கூகுள் தேடல் தளத்தை திறந்தவுடன் கூகுள் தேடல் இடத்திற்குக் கீழே குறிப்புகள் இருக்கும் அதை க்ளிக் செய்து விளையாட்டுக்குள் நுழைந்தால் உங்கள் கணினியையும் மொபைலையும் இணைக்கும் படி உங்களுக்கான லிங்குகள் தரப்படும்.

 உங்கள் குழுவைத் தேர்ந்தெடுத்துவிட்டு நீங்கள் உள்ளே நுழைந்தால் போர்...ஆமா..போர் ஆரம்பம் தான். g.co/lightsaber என்ற தளத்துடனும் கூகுள் க்ரோமை இணைத்து கணினியில் விஷுவல் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் வெளிச்சத்தை சீறிப்பாயும் வாளாக வைத்துக்கொண்டு போருக்குச் செல்லலாம்.

விபரங்களுக்கு வீடியோவைக் காண: 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!