பாண்டுகளுக்குள் பஞ்சாயத்து... | Sir Roger Moore: Sean Connery was disappointment as James Bond - because he was Scottish

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (21/12/2015)

கடைசி தொடர்பு:13:16 (21/12/2015)

பாண்டுகளுக்குள் பஞ்சாயத்து...

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற பாண்ட் பாத்திரத்தில் நடித்தவர்களில் ஒருவர் சான் கானரி, மற்றொருவர் ரோக்கர் மோர். இவர்கள் இடையே தான் இப்போது புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. டேனியல் கிரேய்க் தனது 007 பாத்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கும் நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற கேள்விகள் சுற்றலில் உள்ளன.

இந்நிலையில் முன்னாள் ஜேம்ஸ் பாண்டுகளுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ரோகர் மூர் சமீபத்திய பேட்டியில் சான் கானரி ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடித்தமை ஏமாற்றத்தக்க ஒரு விஷயம் ஏனெனில் அவர் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் சான் கானரியை சற்றே இது கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் சான் கருத்து ஏதும் கூறவில்லை.

விரைவில் இதுகுறித்து அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே பேட்டியில் ரோகர் இன்னொரு கருத்தாக ராணி எலிசபெத்துக்கு அழகிய கால்கள் எனக் கூறி இன்னொரு சர்ச்சையையும் கிளப்பியுள்ளார். இதை நான் சொல்வதால் என் தலை துண்டிக்கப்படும் என நினைக்கிறேன் எனவும் கூறியுள்ள ரோகர் மூர் மீது சான் கானரியின் ரசிகர்களும் கொஞ்சம் கோபத்தில் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close