இளம்பெண்களின் மனதைக் கெடுக்காதீர்கள்...ஜெனிபர் லாரன்ஸ் அறிவுரை!

ஹாலிவுட்டில் நடிகைகளின் திறமைகளை விட அவர்களின் உடலமைப்பிற்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுவதாக எக்ஸ் மேன் படங்களில் நடித்துள்ள ஜெனிபர் லாரன்ஸ் கூறியுள்ளார்.

இவர் அடுத்த வருடம் வெளிவர இருக்கும் எக்ஸ்-மேன்: அப்போகலிப்ஸ் மற்றும் பேசன்ஜர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 25 வயதாகும் ஜெனிபர் லாரன்ஸ், சினிமா துறையில் எப்போதும் அனைவரது பார்வையும் ஒரு நடிகையின் உடல் எடை, வடிவம் போன்ற உடலமைப்பு சார்ந்த விஷயங்களிலையே உள்ளதை தான் வெறுப்பதாகக் கூறியுள்ளார்.

ஒரு நடிகை அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் பெண்களிடம் தவறான கருத்தை பரப்புகிறது. ஒரு நடிகை என்பவர் முதலில் தன் திறமையை தான் வெளிபடுத்தவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த உடல் வடிவம், கட்டுடல் என சாதாரண பெண்களையும் இது வெகுவாக பாதிக்கிறது . அழகு என்பது தோற்றத்தில் இருக்கும் ஒன்று என ஹீரோயின்கள் வாயிலாக தவறாக அவர்கள் உணர்ந்து கொள்வதாகவும் அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் எனவும் அதை உணர்ந்து செயல்படுவது சமுதாயம் மற்றும் மீடியாக்களின் கடமை எனவும் கூறியுள்ளார் இந்த இளம் நடிகை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!