வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (11/01/2016)

கடைசி தொடர்பு:15:46 (11/01/2016)

ஆஸ்கருக்கு இணையான கோல்டன் க்ளோப் விருது பெற்றவர்கள் -முழு பட்டியல்

ஆஸ்கருக்கு இணையான மற்றும் ஆஸ்கார் விருதிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. 73வது கோல்டன் க்ளோப் விருது சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டன.

இந்த விருதில் சிறந்த நடிகருக்கான விருதை டைட்டானிக் நாயகனான லியனார்டோ டிகாப்ரிகோ 2015ல் வெளியான ரெவனண்ட் படத்திற்காகப் பெற்றார். இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து மைக்கேல் புன்கே என்பவரால் எழுதப்பட்ட நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது.  சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்கத்திற்கான விருதினையும் தட்டியது.

சிறந்த நடிகைக்கான விருதினை ஜெனிஃபர் லாரண்ஸ் ஜாய் படத்திற்கான வென்றார். அதுமட்டுமல்லாமல் சிறந்த துணை நடிகைகான விருதினை டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் க்ளோப் திரைப்பட விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல்:


சிறந்த படம் (டிராமா பிரிவு)

தி ரெவனன்ட்

சிறந்த படம் (காமெடி / மியூசிக்கல் பிரிவு)

தி மார்டின்

சிறந்த இயக்குநர் (டிராமா பிரிவு)

அலெஜான்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டும் - தி ரெவனன்ட்

சிறந்த நடிகை (டிராமா பிரிவு)

ப்ரே லார்சன் - ரூம்

சிறந்த நடிகை (காமெடி / மியூசிக்கல் பிரிவு)

ஜெனிஃபர் லாரன்ஸ் - ஜாய்

சிறந்த துணை நடிகை

கேட் வின்ஸ்லட் - ஸ்டீவ் ஜாப்ஸ்

சிறந்த நடிகர் (டிராமா பிரிவு)

லியனாடோ டிகாப்ரிகோ - தி ரெவனன்ட்

சிறந்த நடிகர் (காமெடி / மியூசிக்கல் பிரிவு)

மாட் டாமோன் - தி மார்ஷியன்

சிறந்த துணை நடிகர்

சில்வஸ்டர் ஸ்டோலன் - க்ரீட்

சிறந்த திரைக்கதை

ஆரோன் சார்கின் - ஸ்டீவ் ஜாப்ஸ்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

இன்சைட் அவுட்

சிறந்த பாடல்

ரைட்டிங் ஆன் தி வால் - ஸ்பெக்டர்

சிறந்த பின்னணி இசை

தி ஹேட் ஃபுல் எயிட்

சிறந்த பிறமொழி திரைப்படம்

சன் ஆஃப் சவுல் (ஹங்கேரி மொழி)

சிறந்த டிவி நாடகம் (டிராமா பிரிவு)

மிஸ்டர்.ரோபோட்

சிறந்த டிவி நாடகம் (காமெடி / மியூசிக்கல் பிரிவு)

மொசார்ட் இன் தி ஜங்கிள்

சிறந்த டிவி திரைப்படம்

வுல்ஃ ஹால்

சிறந்த டிவி நடிகை (டிராமா பிரிவு)

ஹன்சன் - எம்பயர்

சிறந்த டிவி நடிகை (காமெடி / மியூசிக்கல் பிரிவு)

ரிச்சல் ஃப்ளூம் - கிரேஸி எக்ஸ் - கேர்ள்ஃப்ரெண்ட்

சிறந்த டிவி நடிகர் (டிராமா பிரிவு)

ஜான் ஹம் - மேட் மேன்

சிறந்த டிவி நடிகர் (காமெடி / மியூசிக்கல் பிரிவு)

ஹர்சியா பெர்னல் - மொசார்ட் இன் தி ஜங்கிள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க