பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் 8 எப்போது?...அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | FAST 8: VIN DIESEL RELEASES NEW YORK TEASER IMAGE

வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (18/01/2016)

கடைசி தொடர்பு:16:10 (19/01/2016)

பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் 8 எப்போது?...அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாஸ்ட் & ஃபியுரியஸ் 8 படத்தின் ரிலீஸ் போஸ்டரை வின்டீசல் தனது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2017, ஏப்ரலில் இப்படம் வெளியாக இருப்பதை, கூறும் இப்போஸ்டர் நியூயார்க் நகரின் மேற்புற தோற்றத்தையும், எம்பயர் ஸ்டேட் கோபுரத்தையும் சித்தரிக்கிறது.

உலகமெங்கிலும் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள இப்பட சீரீஸின் ஏழாம் பாகம் சென்ற வருடம்  ஃபியூரியஸ் 7ஆக வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தியாவில் கூட இப்படம் அதிக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

உலக கார்பிரியர்களின் முக்கிய படமான இப்பட சீரிஸ்களின் எட்டாம் பாகம் 2017 இல் வெளியாக உள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. ஏப்ரல் 14, 2017 ல் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close