வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (21/01/2016)

கடைசி தொடர்பு:17:00 (21/01/2016)

ஒரு தாய் , மகன், ஜன்னல்கள் இல்லா சிறு அறைக்குள் 7 வருட போராட்டம் - இந்தியா வருகிறது ரூம்!

ஆஸ்கார் விருதின் சிறந்த படத்திற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள "ரூம்" திரைப்படம் இந்தியா வருகிறது. எம்மா டொனொக் எழுதிய "ரூம்" எனும் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் "ரூம்". அதிகம் மற்றும் சிறந்த விற்பனையான புத்தகம் எனும் பெயர் பெற்றது.  இதைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தை லென்னி ஆபிரகாம்சன் இயக்கியுள்ளார்.

மீடியாக்களாலும், பத்திரிகையாளர்களாலும் பெரிதும் பாராட்டப்பெற்ற படம் "ரூம்" என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு வருடங்களாக ஒரு சின்ன அறையின் உள்ளே அடைத்து வைக்கப்பட்டு, தங்களது அத்தனை தேவைகளையும் அந்த அறையினிலையே பூர்த்தி செய்துகொள்ளும் தாய் மற்றும் மகன், எப்படி அதிலிருந்து வெளியேறுகிறார்கள் என்ற உணர்வுப்பூர்வமான, போராட்டக் கதையே "ரூம்".

 

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாசிரியர் மற்றும் சிறந்த நடிகை என நான்கு ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது இப்படம். இப்படத்தின் கதாநாயகி பேரி லார்சன்,  சிறந்த நடிகைக்கான கோல்டன் க்ளோப் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இப்படம் ஜனவரி 29ம் தேதி, அவதார், மிஷன் இம்பாஸிபிள் 3 போன்ற 200க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களைத் தந்த பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. மேலும் இம்மாதம் ஆஸ்கர் படங்களின் அணிவகுப்பு நம் இந்தியாவை நோக்கிப் படையெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜனவரி 15ல் தி டேனிஷ் கேர்ள், ஜனவரி 25ல் ரெவெனண்ட், 29ல் ரூம்  மற்றும் அடுத்த மாத தொடக்கத்தில் ஜாய் என வரிசையாக வரவிருக்கின்றன. ஹாலிவுட் சினிமா பிரியர்களுக்கு விருந்து என்றே சொல்ல வேண்டும்.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்