இந்தியாவிற்குப் பெருமை, கெத்து காட்டும் பிரியங்காசோப்ரா!

சென்ற வருடம் தனது "குவண்டிகோ" சீரியல் மூலம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரியங்காவிற்கு , 2016 வருடம், மக்கள் சாய்ஸ் விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுத் தந்து அவரது வெற்றிப் பயணத்தைத் துவக்கி வைத்தது. தற்போது ஆஸ்கார் விருதும் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது

கலிபோர்னியாவில், பிப்ரவரி 28ம் தேதி நடைபெறவுள்ள, 88வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், பிரியங்கா ஆஸ்கார் விருதினை வழங்க உள்ளார். ஆஸ்கார் விருதுகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அதற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் ஸ்டீவ் கேரல், குயின்சி ஜோன்ஸ், பியுங் -ஹுன் லீ, ஜேர்ட் லிட்டோ, ஜூலியன் மூர், ஒலிவியா முன், மார்கட் ரோப்பி, ஜாசன் சீகல், ஆண்டி செர்கிஸ், JK சைமன்ஸ், கெர்ரி வாஷிங்டன், ரீஸ்விதர்ஸ்பூன் போன்றோரின் பெயரோடு பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம் பிடித்துள்ளது. அதில் பிரியங்கா சோப்ராவின் பெயர் இரண்டாவதாக இடம்பிடித்துள்ளதுடன் அவர் குறித்த விபரங்கள் மற்றும் குவண்டிகோ சீரியல்களின் தொகுப்புகளும் இணைந்து ஒரு தனிப் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தனது நடிப்புத் திறமையின் மூலம் உலகளவில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைத் தந்த நடிகர்களிலிருந்து, குறிப்பிட்ட சிலரை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டோம் என ஆஸ்கார் தயாரிப்பாளர்கள் டேவிட் ஹில் மற்றும் ரெஜினால்ட் ஹட்லின் ஆகியோர் கூறியுள்ளனர். ஆஸ்காரின் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில், இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட "கோர்ட்" அந்த வாய்ப்பினை இழந்தது குறிப்பிடத்தக்கது

எனினும் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருது வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே நபர் பிரியங்கா என்பதில் நிச்சயம் பெருமையே.

பாலிவுட்டின் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமிருந்தும் பிரியங்காவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரியங்காவும் தான் ஆஸ்கார் விருதுகளில் கலந்து கொள்ளப் போவதைக் குறித்து  ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஆஸ்கார் விருதுள் வழங்கும் விழாவினை பிரபல நடிகர் கிரிஸ் ராக் தொகுத்துவழங்க உள்ளார்.

-பிரியாவாசு- 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!