ஆஸ்கருக்கு முன்னோடி அவார்டை இந்தமுறையும் வென்ற இயக்குநர்

அலிஜன்றோ கொன்ஜலேஸ் இன்னரிட்டு (Alejandro Gonzalez Inarritu) ,இந்த பேர எப்படி வேணாலும் உச்சரிச்சுக்கோங்க,ஆனா இந்த பேருக்குச் சொந்தக்காரர் தான் இப்ப DGA (Directors Guild of America awards) அவார்டு வரலாற்றுல சிறந்த இயக்குனருக்கான விருத தொடர்ந்து இரண்டாவது தடவ வாங்கி ஹாலிவுட்ல சாதனை பண்ணி எல்லார்கிட்டயும் லைக்ஸ் வாங்கிட்டு இருக்கிறாரு.

DGA விருது ஆஸ்காருக்கு சமமாக மதிக்கக்கூடிய விருது,1938ல இருந்து இந்த விருது கொடுத்திட்டு வாராங்க,இதன் முதல் விருதை வாங்கியவர் G.W.Griffith.இந்த விருது சிறந்த திரைப்படம், ஆவணப்படம் , ரியாலிட்டி ப்ரோக்ராம், தொலைக்காட்சி தொடர்,நகைச்சுவைத் தொடர், குழந்தைகள் ப்ரோக்ராம், விளம்பரம், ட்ராமா,மேலும் ஹானரி லைப் மெம்பர் அவார்டு,ராபட்.பி.அல்ட்ரிச் அவார்டு,ஃப்ரேன்க் சாப்ரா அச்சீவ்மெண்ட் அவார்டு,ஃப்ரேன்க்லின்.ஜெ.ஸ்க்கேப்னர் அச்சீவ்மெண்ட் அவார்டுனு இத்தனை அவார்டு தந்திட்டு வாராங்க,மேலும் கடந்த 10 வருஷத்தில இதில  சிறந்த திரைப்படம் வாங்கின படங்கள் தான் 9 முறை ஆஸ்கார்லயும் சிறந்த திரைப்படம் விருது வாங்கிருக்கு.

அதே போல் இந்த முறை அலிஜன்றோ.ஜி.இன்னரிட்டுவோட 'த ரெவனெண்ட்'(The Revenant) படம் சிறந்த படத்துக்கான விருத வாங்கிருக்கு,அதே படம் 2016 ஆஸ்கார் விருதுக்கும் நாமினேட் ஆகிருக்கு.இன்னொரு சிறப்பு என்னன்னா போன முறையும் இதே விருது பேர்டுமேன் படத்துக்காக வாங்கினார் இன்னரிட்டு,அதன் மூலம் இந்த விருதை தொடர்ந்து இரண்டு முறை வாங்கிய நபர் என சாதனையைப் படைத்துள்ளார்.

இப்போது இவர் தான் ஹாலிவுட்டில் டாப் இயக்குனராக வலம் வருகிறார்,இவர் 1996ல் தனது முதல் திரைப்படத்தை இயக்கினார்,இவர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்,முதல் படம் அமோர்ஸ் பிரோஸ் ( Amores perros),இவர் முதல் DGA விருதை பேர்டுமேன் படத்துக்காகப் பெற்றார்,அது ஒரு ஹாலிவுட் நடிகரின் மனப்போராட்டத்தை சேர்ந்த ப்ளாக் காமெடியாக இருந்தது அதில் மைக்கெல் கீட்டோன் நடித்திருந்தார்.அந்த படமும் 2014 ஆம் ஆண்டில் பல விருதுகளைக் குவித்தது.

இந்த வருடத்தில் 'த ரெவனண்ட்' படத்தில் லியான்ட்ரோ டீ காப்ரியோ நடித்திருந்தார்,இந்தப் படம் இரு நாட்டிற்கும் நடுவில் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்டது,இந்தப் படத்திலும் 'இன்செப்சன்' படத்தைத் தொடர்ந்து டீ காப்ரியோவும் டாம் ஹார்டியும் கூட்டணி போட்டுள்ளனர்.இந்தப் படம் 2015 டிசம்பர் இறுதியில் அமெரிக்காவில்  மட்டும் வெளியானது அடுத்து ஜனவரி 8 உலகளவில் வெளியானது,பல வரவேற்பைப் பெற்று இப்போது 12 ஆஸ்கார் அகாதெமி விருதுக்குத்தேர்வாகியுள்ளது.

அப்போ அலிஜன்றோ கொன்ஜலேஸ் இன்னரிட்டு கைய வெச்சாலே விருதுன்னு ஆயிடுச்சு.

சா.கவியரசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!