Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய மக்களைச் சென்றடையாத இனிய காதல் படம்- காதலர் தின சிறப்புப் பகிர்வு!

மீபத்தில் 65வருட காமிக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் தி பீனட்ஸ் மூவி வெளியானது பலருக்கும் தெரியாது. துரதிர்ஷ்ட வசமாக சரியான புரமோஷன்கள் இல்லாமல் இந்திய மக்களை இந்தப் படம் சென்றடையவில்லை. ஆனால் கண்டிப்பாக நாம் பார்க்கத் தவறிய நல்ல குழந்தைகள் அனிமேஷன் படங்களில் இதை சேர்த்துக்கொள்ளலாம்.

1950களில் காமிக் தொடர்களாக அமெரிக்காவில் ஆட்சி செய்த பீனட்ஸை அடிப்படையாகக் கொண்ட படம் தான் தி பீனட்ஸ் மூவி. உண்மையில் பப்பி லவ் என்றால் நமக்கு தெரிந்த விஷயமே குழந்தைப் பருவத்தில் வரும் ஒரு வித ஈர்ப்பு, விருப்பம், இந்தக் காதலில் ஒரு குழந்தைத் தனம், வெகுளித்தனம், இருக்கும். எல்லாவற்றிற்கும் மேல் சில முட்டாள் தனமான காரணங்களும் இருக்கும். இதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தி பீனட்ஸ் மூவி. சார்லி ப்ரௌன் என்ற சிறுவனும், அவனின் குட்டி நாய் ஸ்னூப்பியும் தான் கதையின் மிக முக்கிய பாத்திரங்கள்.

பெரியவர்கள் பாத்திரமே இல்லாமல் வெறும் குழந்தைகள் பட்டாளம், ஸ்கூல் அதில் ஏற்படும் சின்னச் சின்ன கலாட்டாக்கள் தான் படத்தின் கரு.

கதை இதுதான், ஒரு வகுப்பைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் ,அதில் சார்லி பரௌன் எப்போதும் குழந்தைகள் குழுவில் இணையாமல், பனிக்காலத்தில் பட்டம் விடுதல், பேஸ் பால் விளையாட்டு இப்படி ஏதேனும் எக்குத் தப்பாக செய்து மற்ற சிறுவர்களிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருக்கிறான். அவனது செல்ல நாய் அவனது நண்பனாக பல உதவிகளைச் செய்கிறது. இதற்கிடையில் இவர்களின் வகுப்பிற்கு ஒரு புது மாணவி வருகிறாள். சிவப்பு நிற முடி, அழகிய தோற்றம் என வகுப்பில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு அவள் மீது க்ரஷ், பெண் குழந்தைகளுக்கு சற்றே கோபம். நம் ஹீரோவுக்கு கொஞ்சம் அதிகமான விருப்பம். அதே தான் பப்பி லவ்.

அவளை இம்ப்ரஸ் செய்யும் வேலைகள் ஆரம்பம். வழக்கம் போல் சொதப்பல். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என வேதனைப் படும் சார்லி திடீரென பள்ளியின் பெர்ஃபெக்ட் மாணவனாக அறிவிக்கப்பட அவ்வளவு தான் சார்லிக்கு ரசிகர்கள் குவிகிறார்கள். அவன் நினைத்தது போல் அந்தப் பெண்ணின் பார்வையும் விழுகிறது. தினம் தினம் கொண்டாட்டம். சார்லி ஹீரோவாக மாற ஒரு கட்டத்தில் மேடையில் நீ பெர்ஃபெக்ட் மாணவனாக அறிவிக்கப்பட்டதற்கான பரீட்சை பேப்பர் என கொடுத்தால். அது அவனுடையதே அல்ல எனத் தெரிய வருகிறது சற்றும் தயங்காமல் மேடையிலேயே இந்த வெற்றி என்னுடையதல்ல என் நண்பனுடையது, பெயரை மாற்றி எழுதிவிட்டோம் எனக் கூறி உண்மையைச் சொல்லிவிட்டு விழா இடத்தை விட்டு வெளியேறுகிறான் சார்லி. மீண்டும் அதே சோகக் கதை.

வகுப்புகள் முடிந்து விடுமுறை ஆரம்பிக்க, சம்மர் டான்ஸ் க்ளப்பில் ஜோடிகளை தேர்வு செய்யும் மும்முரம் ஆரம்பிக்கிறது. அப்போது யாருமே சார்லியைத் தேர்ந்தெடுக்காமல் போக அவன் மனம் கவர்ந்த பெண் அவனைத் தேர்வு செய்கிறாள். ஏன் என சார்லி அவளிடம் கேட்க, உன்னிடம் உள்ள நேர்மை தான் உனது வெற்றி. உன் தங்கைக்காக நீ உன் வாய்ப்பை இழந்தாய், எனக்காக என் புராஜெக்டுகளை முடித்தாய். நீ ரொம்ப நல்லவன் சார்லி என அந்தப் பெண் பதில் சொல்ல சார்லியை மற்ற நண்பர்கள் தூக்கிக் கொண்டு பரவசமடைகிறார்கள்.

படம் பப்பி லவ் தான் என்றாலும் நேர்மையாகவும் , உண்மையாகவும் இருந்தால் யாருக்கும் நம்மை பிடிக்கும் என எக்காலக் காதலுக்கும் அடிப்படைத் தத்துவம் வைப்பது இன்னொரு ப்ளஸ். ஸ்டீவ் மார்டினோ இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மேலை நாடுகளில் மெகா ஹிட்டாகியுள்ளது.

நம்மூரில் சில மால் திரையங்குகளில் மட்டுமே வெளியான படம், ஓடிய தடமே தெரியாது போனது தான் சோகம்.

- ஷாலினி நியூட்டன் - 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்