பிரித்தானிய விருதுகளை குவித்தது டைட்டானிக் நாயகனின் ‘தி ரெவனன்ட் ‘ | Baftas 2016: The Revenant rules at Baftas

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (15/02/2016)

கடைசி தொடர்பு:16:52 (17/02/2016)

பிரித்தானிய விருதுகளை குவித்தது டைட்டானிக் நாயகனின் ‘தி ரெவனன்ட் ‘

பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் மற்றும் டெலிவிஷன் ஆர்ட்ஸ் விருதுகளில்(BAFTA ) அதிக விருதுகளை அள்ளியது தி ரெவனன்ட் திரைப்படம். டைட்டானிக் நாயகன் லியோனார்டோ டீகாப்ரியோ நடிப்பில் வெளியான தி ரெவனன்ட் படம் BAFTA விருதுகளில் 5 விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளது.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த ஓளிப்பதிவு, சிறந்த சப்தம் போன்ற விருதுகளை வென்றது தி ரெவனன்ட். மேட் மேக்ஸ்: ஃபியுரி ரோட் இதற்கு அடுத்தபடியாக சிறந்த மேக்கப் அண்ட் ஹேர், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங், ப்ரொடக்சன் டிசைன் என 4 விருதுகளை வென்றுள்ளது.

இவ்விரண்டு திரைப்படங்களுமே ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் இதில் விருதுகளை வென்றுள்ளது. ரூம், ஸ்டார் வார்ஸ் அவேக்கன், ஸ்பாட் லைட், பிரிட்ஜ் ஆப் ஸ்பீஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற படங்களும் விருதுகளை வென்றுள்ளது.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்