ஹாலிவுட் ரசிகர்களுக்குக் கூட கிடைக்காத அரிய வாய்ப்பு இந்தியர்களுக்கு!

ஹாலிவுட்டிற்க்கு முன்னதாகவே இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது டிஸ்னியின் "தி ஜங்கிள் புக்". வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில், 'அயன் மேன்' புகழ் ஜான் பிவ்ரேவ் இயக்கியுள்ள இப்படத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கனான,12 வயது சிறுவன் நீள் சேத்தி மோக்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற தி ஜங்கிள் புக் கதையை இதுவரை புத்தக வடிவிலும், கார்ட்டூன் வடிவிலும் பார்த்த குழந்தைகளுக்கு, டிஸ்னி 3D லைவ்-அனிமேஷன் தொழில் நுட்பத்தில் கண்களுக்கு விருந்தாக்க வருகிறது. ஏப்ரல் 15 ஹாலிவுட்டில் வெளியாக இருக்கும் இப்படத்தினை, ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஏப்ரல் 8 அன்று இந்தியாவில் வெளியிட முடிவு செய்துள்ளதாக டிஸ்னி இந்தியாவின், துணைத் தலைவர் அம்ரிதா பாண்டே கூறியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. தி ஜங்கிள் புக் கதையில் வரும் மூக்லி, பாலு, பகீரா, கா மற்றும் சேர் கான் போன்ற கதாபாத்திரங்கள் இந்திய மக்களிடையே நன்கு பரிச்சயமான, புகழ் பெற்ற கதை என்பதோடு, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது, மும்பையில் பிறந்து, இலக்கியத்தில் நோபல் பரிசு வென்ற ருத்யார்ட் கிப்ளிங்கின் 'தி ஜங்கிள் புக்' நாவலைத் தழுவியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!